Home » படித்ததில் பிடித்தது » ஆறு வகைப் படைவீரர்கள்!!!
ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள்

எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தகுந்த சைன்யத்தை ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தப் படைவீரர்களின் தொகுப்பு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும், அவர்கள்மீது கொள்ளப்பட்ட கண்காணிப்பு பற்றியும் மஹாகவி காளிதாஸன், தனது “ரகுவம்ச” காவியத்திலே அழகாக வர்ணித்துள்ளார்.

1. மௌலா:

நல்ல குடியில் பிறந்து, பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்பவர்கள். இவர்களைச் சுலபத்தில், பகைவர்கள் பணத்தாலோ, மற்ற வகையாலோ வசப்படுத்த முடியாது. இவர்கள் தங்களது அரசரிடத்தில் உறுதியான விஸ்வாசம் உடையவர்கள். நம்பத் தகுந்தவர்கள்.

2. ப்ருத்யா:

கூலிப்படை. இவர்கள் அரசனிடம் சம்பளத்திற்கு வேலைசெய்யும் நிரந்தரமான ஊழியர்கள். போர் ஏற்படும் காலத்தில் மட்டுமின்றி, மற்ற சமயங்களிலும் பராமரிக்கப்பட வேண்டிய வீரர்கள். இவர்களை அதிகம் நம்புதல் கூடாது.

3. ஸுஹ்ருத:

நண்பர்கள். அரசனது நண்பர்களும் நட்பு நாட்டு வீரர்களும் இந்தப் பிரிவில் அடங்குவர். நடப்பின் காரணமாக அரசனுக்கு உதவிசெய்யும் இவர்கள் நம்பத்தகுந்தவர்கள்.

4. ச்ரேணய :

சண்டை ஏற்படும்போது, அந்த நேரத்தில் திரட்டப்படும் போர் வீரர்கள், சம்பளத்திற்கான வேலை செய்யும் இவர்கள், சண்டை முடிந்தவுடன் கலைக்கப்பட்டு விடும் தற்காலி ஊழியர்கள் ஆவர். (Casual Labour) இவர்களை அதிகம் நம்புதல் கூடாது.

5. த்விஷத:

எதிரிகளின் சேனையைவிட்டுத் தாமாகவே ஓடிவந்தவர்களும் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்களும் அடங்குவர். மேலும் நிறையப் பணம் கொடுத்து ஆசை காட்டி எதிரியின் படையிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் பகைவனுக்குப் பகைவனாயுள்ள வேறு ஒருநாட்டின் வீரர்களும் இந்தப் பிரிவில் அடங்குவர். இவர்களை முழுவதுமாக நம்புதல் கூடாது.

6. ஆடவிகம்:

காட்டுப்படை. காட்டில் வாழுகின்ற வேடர்கள் போன்றவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும். மலைப்பாங்கான இடங்களிலும் காடுகளிலும் சண்டையிடுவதிலும் வேவு பார்ப்பதிலும் காடுகளை வெட்டி அழித்துச் சாலை அமைத்தல் முதலிய பணிகளில் இவர்கள் பயனுள்ளவர்களாய் இருப்பர். இவர்களை முழுவதுமாக நம்பக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top