காமராஜருக்கு எதற்கு இத்தனை மரியாதை ?
1. காமராஜர் ஆங்கலக் கல்வி பயின்றதில்லை.
ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் முதல் மாநில
முதல்வர் அவர்.
2. 12 வயதில் துணிக்கடையில் வேலை செய்த அவர்
ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அறிந்தபின்
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
3. உப்புச்சத்தியாக்கிரகத்தில்
அடுத்தடுத்து நடந்த போராட்டங்களில்
கலந்து கொண்டு சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்தவர்.
4. முதலமைச்சர் ஆனபின் அவருக்கு போட்டியாக
முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சி.சுப்ரமணியன்,
பக்தவத்சலம் ஆகியோருக்கு அமைச்சர்
பதவி கொடுத்து அரவணைத்தவர்.
5. பஞ்சாயத்து தோறும் ஒரு தொடக்கப்பள்ளி,
ஊராட்சி தோறும் ஒரு உயர்நிலைப்
பள்ளிகளை உருவாக்கினார்.
6. பள்ளிக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவதற்காக
மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
7. வைகை அணை, மணிமுத்தாறு, கீழ்பவானி,
பரம்பிக்குளம் சாத்தனுர் அணை ஆகிய
அணைக்ட்டுகளை கட்டி நீர்ப்பாசனத்தற்கு வழிவகுத்தார்.
8. சென்னை ஆவடி ராணுவத்தளவாடத் தொழிற்சாலை,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி,
சென்னை ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ்,
திருச்சி பெல் கனரகத் தொழிற்சாலை என தொழில்
வளர்ச்சியில் தமிழகத்தை உயர்த்தினார்.
9. முதியவர்களே இருப்பதால் காங்கரசில் வேகம்
இல்லை என்பதை உணர்ந்து இளையோருக்கு பொறுப்புகள்
கொடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை அகில இந்திய
காங்சிரசுக்கு அளித்து அதன் முன்னுதராணமாக
தானே முதல்வர் பதவியில்
இருந்து விலகினார்.இதற்கு பெயர்
கே ( காமராஜர்) பிளான்.
10. அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும்
பொறுப்பு வகித்தார். நேருவுக்குப் பிறகு லால்
பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக முன்மொழிந்தார்,
அவருக்குப்பின் இந்திரா காந்தியை முன்மொழிந்தார்.
11. இறுதியில் அவர் சேர்த்து வைத்திருந்த
சொத்து சில கதர் சட்டைகளும், வேட்டிகளும், சொற்ப
பணமும்.