Home » உடல் நலக் குறிப்புகள் » அன்னாசிப் பழம்!!!
அன்னாசிப் பழம்!!!

அன்னாசிப் பழம்!!!

செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு – முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன.

`வைட்டமின் – சி’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

அன்னாசிப்பழம் ‘பூந்தாழப் பழம்’ என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது.

அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.

அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் அனாஸ் சாட்டிவிஷ் ஸ்கல்ட் (Annas Sativis Schult).

அன்னாசியின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான பிரேஸில் ஆகும். 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பழம் முதலில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், செல்வந்தர்களின் பழமாக இருந்தது.

இப்போது அனைத்து நாட்டிலும் அனைவரும் பெறுமளவில் தாராளமாகக் கிடைக்கின்றது.

இதன் காரணமாகவே மேல்நாடுகளில் இறைச்சி உணவு சாப்பிடும் அனைவரும், தாங்கள் சாப்பிடும்போது அன்னாசிப் பழத்துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவது பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்:

அன்னாசிப் பழச்சாறும் ஜீரணச்சக்தியை விரைவுபடுத்தும் என்பதுடன் சத்துணவு ஆகும். இச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோயால் அவதிப்பட்டு உடல் பலவீனமானவர்கள் நன்கு உடல் தேற விரைவில் ஆரோக்கியமடைவார்கள்.

மேலும் இப்பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.

குடல் புண்களை அழிக்கும் சக்தியும், நீண்ட நாள் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணி ஆகியவற்றுக்கும் அன்னாசிப் பழம் அருமருந்தாகும்.

பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.

இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.

நாம் கூட அன்னாசிப்பழ ரசம், பாயசம், ஜாம் வைத்து விருந்துகளில் பரிமாறுவது என்பது வழக்கம் தானே.

முக்கியமாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களது உணவாக இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு அளிப்பதோடு பசியையும் தூண்டும்.

சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள்.

முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

உதடுகள் அடிக்கடி வறண்டு போய் விடுகிறதா? அன்னாசிப்பழச் சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்தச் சாறை பஞ்சில் லேசாகத் தொட்டு உதடுகளில் தடவினால், வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் ஈரப்பதத்துடன் பளபளக்கும்.

சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும்.

இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கும்.

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு. இரண்டு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப் பூசி 10 முதல் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சுருக்கங்கள் மறைந்து, சங்குபோல் மின்னும் கழுத்து.

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிந்து அழகைக் குறைத்துக் காட்டுகிறதா? கவலை வேண்டாம். ஒரு டிஸ்பூன் அன்னாசிப்பழச் சாறுடன் ஒரு டீஸ்பூன் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கி, பளிங்கு போல் பளிச்சிடும் உங்கள் முகம், தலைமுடியை பாதுகாப்பதுடன் கண்டிஷனராகவும் செயல்படுகிறது அன்னாசிப்பழம்.

அரை கப் தேங்காய் துருவலுடன், 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடர், 2 டீஸ்பூன் அன்னாசிப்பழச் சாறு கலந்து தலையில் தேய்த்துவந்தால், பளபளப்புக் கூடுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கூந்தல் வெடிப்பைப் போக்கும் சக்தி, அன்னாசிக்கு இருக்கிறது. 2 டிஸ்பூன் பயத்தமாவு, தயிர் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு தேங்காய்ப்பால், அன்னாசிப்பழச் சாறு சேர்த்து ஷாம்புபோல தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளக்கும். தலையில் அதிக எண்ணெயப் பசை இருந்தால் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.

இவ்வாறாக அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்னாசிப் பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் என்பது மூட நம்பிக்கை.

மாம்பழம். ஆரஞ்சு பழம் இவற்றில் உள்ள அதே வெப்ப அளவான 14 கலோரியே அன்னாசியிலும் உள்ளது.

நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 82 கலோரி ஆகும்.

அன்னாசிப்பழம் குணப்படுத்தும் முக்கிய நோய்கள் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவிதமான காது நோய்கள், எல்லாவிதமான பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை.

தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்துச் செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களை விரைவில் குணப்படுத்தும்.

அன்னாசிப்பழச் சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.

நிற்காமல் தொடரும் விக்கல் நிற்க, ஒரு பாலாடை அளவு சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

மஞ்சட்காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு.

இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு பழச்சாறு சிறந்த டானிக். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

அன்னாசிப் பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

 

20 கிராம் எடையுள்ள அன்னாசிப் பழத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள் வைட்டமின் ஏ-17 மி.கி. இரும்புச்சத்து 0.3 கி. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி சிறந்த டானிக்.

பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவை நீக்குவதில் அன்னாசி சிறந்ததாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். இரத்தத்தைச் சுத்தி செய்வது.

சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.

தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை உண்பவர்கள் தேகத்தில் ஆரோக்கியமான பளபளப்பு ஏற்படும்.

தீராத கோடை தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு.

சுவையும் மணமும் நிறைந்த அன்னாசி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச் சத்து 0.60, தாது உப்புகள் 0.05, நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன.

சுண்ணாம்புச் சத்து, மணிச் சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் விட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பையை குறைக்க அன்னாசி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக் காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு.

எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். அன்னாசிப் பழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும்.

உடல் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத் தரும். உள் உறுப்புக்களை பலப்படுத்தும். கண் ஒளி பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top