தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது.
அவ்வூரில்… முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள்.
கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள்.
இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள்.
இவர்களது பெயருக்கு ஏற்றாற் போன்றுதான் செய்கின்ற செயல்களும் இருக்கும்.பொதுவாக இவர்களுக்கு அறிவும் கிடையாது.
உலக அனுபவமும் கிடையாது. வேலை செய்து பிழைக்க வகையும் தெரியாது. இவர்களுக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது என்பதால் வயிறு சும்மா இருக்குமா?
வயிறு பசியினால் வாடும் போதெல்லாம் கைநீட்டி ஏதாவது கேட்டு சாப்பிட முடிந்ததே தவிர வயிறார சாப்பிட முடியாமல் வாடினார்கள்.
எவருடைய வீட்டில் போய். உணவுக் கேட்டால் உடம்பை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்களே? எங்காவது கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ள கூடாதா? என ஏளனத்துடன் கூறுவார்கள்.
ஊரிலுள்ள எல்லோரும் இவர்களை ஏளனமாகவும், கின்டலாகவும் பேசியதினால் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றால் பிழைத்து கொள்ளலாம் என்று தீர்மானித்து கால்போன படி சென்று கொண்டிருந்தனர்.
வெளியூருக்கு சென்று கொண்டிருந்தனர். முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
நாம் ஐந்து பேர்களும் ஒரே இடத்திற்குப் போனால் வேலையும் கிடைக்காது, உணவும் கிடைக்காது. நாம் எல்லோரும் ஒரு குருநாதரைத் தேடி கண்டு பிடித்து சீடர்களாகி விட்டால் நமக்கு எந்த கஷ்டமும் வராது என்றான்.
நண்பர் நால்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மூடன் அதனால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றான்.
நாம் எல்லோரும் ஒரு வீட்டில் போய் உணவு கேட்டால் சோம்பேறி என்பார்கள். ஆனால் நாம் எல்லோரும் ஒரு குரு தேவருடன் சாமியார்கள் போன்று சென்றால் நம் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதையோடு நடந்து வயிராற உணவும் அளிப்பார்கள் என்றான் முட்டாள்.
இது சரியான யோசனைதான் என்று மட்டி, மடையன், மூர்க்கன், பேயன் ஆகிய நான்கு பேர்களும் சந்தோஷ மடைந்தனர்.
அயலூரை அடைந்தாலும் ஒரு சாமியாரின் மடம் இருந்தது. அது பரமார்த்த குருவின் மடமாகும். அங்கு சென்ற ஐவரும் தங்களின் நிலையைக் கூறி சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.
பரமார்த்த குரு தன்னை நாடி வந்த மூடர்களுக்கு சற்றும் சளைக்காத முட்டாள் குருவாகும். தனது முட்டாள் தனம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஊரின் எல்லையில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார்.
இந்த வயதான காலத்தில் தனியாக வீடு வீடாகச் சென்று சாப்பிடுவது முடியாத காரியமாக இருக்கிறது.
இவர்களை சீடர்களாக ஏற்றுக் கொண்டால் இவர்களை அனுப்பி விட்டால். அவர்கள் கொண்டு வரும் உணவை நிம்மதியாக உண்டு உறங்கி காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைத்து மூடர்களான ஐந்து சீடர்களுக்கு முட்டாளான வயதான இவர் பரமார்த்த குருவானார்.