Home » பொது » பொதுவான உண்மைகள்!!!
பொதுவான உண்மைகள்!!!

பொதுவான உண்மைகள்!!!

நாம் எண்ணிப்பார்க்காத 20 பொதுவான உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றில் எவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை எனப் பாருங்கள்.
பிடித்திருந்தால் இந்த தகவலை share செய்யுங்கள்.

1. நீங்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானால் உங்களுடைய உடல் 28,000 டிகிரி சென்டிகிரேட் வரை சூடாகிறது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்ப அளவு.

2. இந்த உலகிலிருந்த அனைத்து டைனோசர்களும் அழிக்கப்பட்டுவிட்டபோதிலும் தேரை அல்லது பல்லியினுடைய இனம் அழிக்கப்படவில்லை. முதலைகள், ஆமைகள் போன்றவை பிழைத்துக்கொண்டதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது.

3. ஹவாய் நாட்டவருடைய அகரவரிசையில் 12 எழுத்துக்கள் மாத்திரமே உள்ளன.

4. நீங்கள் ஒவ்வொரு முறை தும்முகின்றபோதும் உங்கள் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்துகின்றது.

5. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது.

6. ஹம்மிங் எனப்படும் பறவை மட்டுமே பின்புறமாகப் பறக்கக்கூடியது.

7. நெருப்புக் கோழியினுடைய கண் அதனுடைய மூளையைவிடப் பெரியது.

8. கரப்பான் பூச்சிகள் தலையில்லாமல் 9 நாட்கள் உயிர்வாழக் கூடியவை.

9. செந்நாரைக்கு அதனுடைய தலை தலைகீழாக இருக்கும்போது மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

10. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னமே தீமூட்டி (லைட்டர்) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

11. வலது கைப்பழக்கமுடைய நபர்களை விட இடது கைப் பழக்கமுடைய நபர்கள் 7 ஆண்டுகள் குறைவான வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.

12. அதிவேக கெமராக்களைக் கொண்டு விஞ்ஞானிகள் மழை நீர் கண்ணீர் வடிவத்தில் இல்லை அது ஹெம்பர்கர் பண்னைப் போன்றது என கண்டுபிடித்துள்ளனர்.

13. 1985 மார்ச் மாதம் 15ஆம் தேதி தான் முதலாவது இன்டர்நெட் டொமைன் Symbolics.comஎன்ற
பெயரில் பதிவு செய்யப்பட்டது.

14. 1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிராகம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த முதல் மாதத்தில் 6 தொலைபேசிகள் மட்டுமே விற்கப்பட்டன.

15. 7.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த டொமைனாக தற்போது Business.com உள்ளது.

16. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தால் 1907ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மஞ்சள் நிறம் தான் மிக எளிதாக அடையாளப்படக்கூடியது என கண்டுபிடித்தனர்.

17. நியூயார்க் டைம்ஸ் இன் ஞாயிறு வெளியீடு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 63,000 மரங்கள் தேவைப்படுகிறது.

18. இந்திய இரயில்வேத் துறைதான் உலகின் மிக அதிக எண்ணிக்கையுடைய தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 1.6 மில்லியன் பேர் தொழில்புரிகின்றனர்.

19. Happy Birthday பாடலின் சொந்தக்காரர் வார்னர் செப்பல். ஒவ்வொராண்டும் 1 மில்லியன் டொலர் வரை இப்பாடலை வர்த்தகப் பாவனைக்குப் பயன்படுத்துவதெற்கென வழங்கப்படுகிறது.

20. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் நிறக்குருடு தான் பிறக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top