”மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ”
ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க…
முறுக்க என ஒரே சத்தம்!
அவ்வழியே ஒரு ஞானி சென்றார்.
அவரிடம் தாய் முறையிட்டாள்.
“”சுவாமி…..! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்….?
நீங்களே சொல்லுங்கள்… தாயின் பாசம் தானே பெரிது….?”
மருமகளும் அவ்விதமே முறையிட்டாள்.
ஞானி சிரித்தபடிச் சொன்னார்.
“”தாயின் பாசம் சிறந்தது. ; ஆனால், தாரத்தின் அக்கறையே பெரிது. தாய், தன் மகன் தன்னைப் போலிருப்பான்; துணையிருப்பான் என்ற நோக்கம் கொண்டே வளர்க்கிறாள்.
இருபது வருடங்கள் வளர்த்துப் பழகியதாலான பாசமும் அதில் உண்டு. தாரமோ, இருபது வருடங்கள் எங்கோ வளர்ந்து, யாருடனோ வாழ்ந்து மணமாகிய பின் புகுந்த வீடு வருகிறாள். இவர் தான் புருஷன் என இதுவரை அறியாதவனோடு வாழ்வை ஆரம்பிக்கிறாள்.
தன் தேவை எல்லாம் பெற்றோரால் நிறைவேற்றப்பட்ட நிலையிலிருந்து, தன் கணவனின் தேவை, விருப்பம், உணவு என சகலத்துக்கும் அக்கறை கொள்கிறாள். ஆக, தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை…”
இதைக் கேட்டதும், தானும் ஒரு காலத்தில் தாரமாக இருந்தவள் தானே என நினைத்த அந்த தாயின் மனம் அமைதியானது