Home » உடல் நலக் குறிப்புகள் » இலந்தைப் பழம்!!!
இலந்தைப் பழம்!!!

இலந்தைப் பழம்!!!

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

பொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.

இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம்இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்

எல்லோரும் வாங்கும் பழம்..

இது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்

இந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..

இன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

Tamil – Elandhai

English – Chinese date

Telugu – Regi pandu

Malayalam – Ilanta

Hindi – pitni-ber

Sanskrit – Kola

Botanical name – Ziziphus mauritiana

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி

மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த

உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்

இலந்தை நெறுங்கனியை யெண்

– அகத்தியர் குணபாடம்

நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.

இலந்தை பழம் பற்றி தெரிந்து கொள்ளலாமா!

இலந்தை பழத்தில் புரதச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் தாது
உப்புகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில்
மட்டும் இதை சாப்பிடலாம்.

இலந்தை மரத்தின் உள்பட்டை களை உலர்த்தி, பொடி செய்து
தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவ,
ஆறாத புண்ணும் ஆறிவிடும்.

இதன் மரத்தின் வேரை அரைத்து, மூட்டு வலிக்கு பூச
மூட்டுவலி குணமாகும். இது மலச் சிக்கலை போக்கக் கூடியது.

தினமும் காலை உணவுக்கு பின்பு 5 முதல் 10 இலந்தை
பழங்களை சாப்பிட்டு வர, வாய் குமட்டல், பித்தம், மயக்கம்
போன்றவை குணமாகும். ஆனால்,

இதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள்

பழங்களில், குறிப்பாக நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமீன்கள்
அடங்கியிருப்பதால் அவை எளிதில் ஜீரனமாகி, இரத்தில் கலக்கிறது.

அந்த வகையில் இலந்தை பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம்
அடங்கியுள்ளன.

இப்பழம் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

இலந்தையில் இரண்டு வகை உண்டு, ஒன்று நாட்டு இலந்தை,
காட்டு இலந்தை. இந்தப் பழத்தில் சிலவற்றில் இனிப்புச் சுவையும்,
சிலவற்றில் புளிப்புச் சுவையும் இருக்கும்.

இலந்தையில் வைட்டமீன் ஏ, பி, சி என்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
சுண்ணாம்புச் சத்தும், இரும்பு சத்தும் அதிகம் உள்ளது.

இலந்தை கிடைக்கும் சீசன்களில் இதை எடுத்து கொள்ளலாம்.
எலும்புகள் உறுதி பெறுவதோடு, பற்களும் உறுதி பெறும்.
வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என பல நோய்களுக்கு மருந்தாக
இலந்தை பயன்படுகிறது.
மாரடைப்பு உள்ளவர்கள் இப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சிலர் எதை சாப்பிட்டாலும் செரிக்காமல் அவதிப்படுவர். இவர்கள்
இலந்தையுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டு வர வயிறு இலகுவாகி
செரிமான பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பெண்களுக்கு மாதவிடைக் காலங்களில் வரும் வயிற்றுப் போக்கை
தடுக்கவும் இந்தப்பழம் பயன்படுகிறது.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்
கூடிய சக்தியும் இலந்தைக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top