உயரம்
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
முயற்சி
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்
எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை! -லியோ டால்ஸ்டாய்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். – ஐன்ஸ்டைன்
சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல; எடுக்கப்படுவது! – நேதாஜி
உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! -அம்பேத்கர்
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை! -பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்.
முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்
வாய்ப்பு
நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
எண்ணம், சொல், செயல்
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்
கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன் – காந்திஜி
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்
கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு;இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும் -ஹோரேஸ்
முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!
-ஸ்காட் பிட்ஜெரால்டு நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.
உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.
இலக்கு
நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?
செல்வம்
பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்
முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள். -வின்ஸ்டன் சர்ச்சில்
சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான் – செனேகா
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.