நான்கு நண்பர்களும் பழனியப்பனின் அறையில் இருந்தார்கள்.
நிலைமை இறுக்கமாக இருந்தது. சங்கரின் கொலையை அவர்கள் ஜீரணிக்க முடியவில்லை.
கரிகாலன் தான் கொலையை செய்தது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
யாரும் சங்கரின் வீட்டில் இதைப் பற்றி தகவல் சொல்லவில்லை. அது போலீஸின் வேலை என்று தடுத்துவிட்டார் பழனியப்பன்.
இன்னும் நமக்கு தஞ்சை போலீஸ் பாதுகாப்பு தரவில்லையே என்று வருத்தப்பட்டார்.
ஆனால் லிப்டின் ஆப்பரேட்டர் ஆள் மாறியதை நண்பர்கள் காணத் தவறவில்லை.
சார் நாம் இப்ப அடுத்தது என்ன செய்யலாம்.
இப்ப நாம போகவேண்டியது மதுரைக்கு. மதுரை பல்கலைகழகத்திலே இந்த தலைப்பில யாராவது ஆராய்ச்சி பண்ணாங்களான்னு பாக்கனும்.
ஏன் மதுரைக்கு என்றாள் நீலா.
ஞானப்ரகாசம் சார் எடுத்த நோட்ஸ்ல எந்த லைப்ரரிலே எந்த புத்தகத்திலேர்ந்து இந்த விஷயங்களை சேகரிச்சாருன்னு எழுதியிருக்காரு. இதே புத்தகங்களை யாரெல்லாம் எடுத்துட்டு போனாங்கன்னு பார்த்தா இன்னும் மேலே போகலாம்.
ஆராய்ச்சியில் மேலே போகறோமோ இல்லை மேலே…………. போகப்போறோமோ என்றாள் சவிதா.
பயப்படாதே சவி அதான் கொலை பண்றவங்களை உள்ளே தூக்கி வெச்சாச்சே என்றான் ரவி.
இல்லை ரவி. கரிகாலன் மட்டுமே இதுல இருக்கறதா எனக்குப் படலை என்றான் ரகு குழப்பத்துடன்.
சங்கரிடம் இருந்த காகிதங்களில் சந்திரசேகரின் பெயர் டாக்டர் பட்டத்திற்காக பதிவு செய்யப்பட்டது என்ற விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ரமேஷ் சொல்லியிருந்ததால் மௌனம் காத்தான்.
இனிமையான சுற்றுலா இறுக்கமாக மாறிக் கொண்டிருந்தது.
போலீஸ் ஆய்வுக்கு பின் வண்டியை திருப்பிக் கொடுத்திருந்தனர். ரகு ஓட்டுனராக மாற அவன் அருகில் நீலா ஜோடியாக பின் இருக்கையில் பழனியப்பன் தனிமைப்பட அதற்கு பின் இருக்கையில் சவி-ரவி இன்னொரு ஜோடி.
வண்டியில் சங்கர் இல்லாத்தால் நகைச்சுவை குறைந்திருந்தது.
இவர்கள் வண்டியை எடுத்ததும் இன்னொரு வண்டி அதன் பின் தொடர்ந்த்து.
தொடரும்…