நம் முன்னோர்கள் செப்பு பாத்திரங்களை ஏன் பயன்படுத்தினார்கள்?
செப்பு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ஆற்றலுடையது . ஆயுர்வேதம் செப்பு பாத்திரங்களில் தண்ணீர் சேமிப்பதை பரிந்துரைக்கிறது.
இன்று கூட, இராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவில் நிர்வாகம், சிவபெருமானுக்கு வழங்கப்படும் கங்கை நதியிலிருந்து இருந்து கொண்டு தண்ணீரை சேமிக்க பெரிய அளவிலான செப்பு பாத்திரங்களை பயன்படுத்துகிறது
இவ்வாறு சேமிக்கப்படும் நீர், சுமார் ஓர் ஆண்டு வரை சுத்தமாகவே இருக்கும். மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, செப்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீர், உணவு நச்சுக்கு காரணமான `E-Coli ‘பாக்டீரியாவைக் கொல்லும் திறனுடையது என கண்டுப்பிடிக்கபட்டுள்ளது .
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி, செப்பு அணுக்கள் இந்த கேடுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும் சக்தியுடையது என நிரூபித்துள்ளனர்.
இந்த ஆற்றல் தங்கம் உள்ளிட்ட மற்ற எந்த உலோகங்களிலும் இல்லை என்பது குறிப்பிட தக்கதாகும்.
இன்னொரு சுவாரஸ்யமாக செய்தி என்னவென்றால் ‘Southampton’ பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின் படி எஃகு (stainless steel)பாத்திரத்தில் சேமித்த தண்ணீரில் ‘Coli 157’ எனும் பாக்டீரியாக்கள் மாதக்கணக்கில் உயிர்வாழும் என்றும் அதே சமயம் அறை வெப்பநிலையில் (room temperature) வைக்கப்படும் செப்பு பாத்திரத்திலுள்ள தண்ணீர் இந்த பாக்டீரியாக்களை வெறும் 4 மணி நேரத்தில் கொன்று விடும் என்றும் கண்டுப்பிடித்துள்ளனர்.
சாதாரணமாக 20 பாகை வெப்பநிலையில் (20 Celsius), எஃகு பாத்திரத்தில் உள்ள நீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்களும், பித்தளை பாத்திரத்தில் 4 நாட்களும் உயிர் வாழும்.அதிக அளவு துத்தநாக (zinc) சேர்க்கை உடலில் செப்பு குறைபாட்டை உண்டாக்கும், சில நேரங்களில் செப்பு குறைபாடு இரத்த சோகையை உருவாக்க முடியும். இதற்கான தீர்வு மிகவும் எளிது.
முதலாவதாக, ஒவ்வொரு காலையும் குழாயிலிருந்து குளிர்ந்த நீரில் ஒன்று அல்லது இரண்டு குவளை குடிக்க செப்பின் பலன் கிடைக்கும். இரண்டாவதாக, திராட்சை மற்றும் பிற செப்பு /தாமிரம், அதிக கொண்ட உணவுகளை சாப்பிடுவது.
மூன்றாவது, செப்பு சத்து கொண்ட வைட்டமின் உட்கொள்வது . இறுதியாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் வழக்கத்திலுள்ள பழக்கத்தை பின்பற்றுவது.
ஒரு செப்பு உலோக பாத்திரத்தை வாங்கி, உறங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் கொண்டு நிரப்பி, அடுத்த நாள் காலை எழுந்தவுடன் குடிக்கவும்.
இந்த செம்பு தண்ணீர் மிகவும் எளிதாக நம் உடலில் உறிஞ்சப்படுகிறது என்றும் சுமார் 45 நிமிடங்களில் செல்களை சென்றடைகிறது என்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுவாக காலை தண்ணீர் அருந்திய பிறகு, 45 நிமிடங்கள் இடைவெளிக்குப் பிறகே தேநீர் அல்லது காபி அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.