ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது.
மறைத்து வைப்பவை, மறைந்திருப்பவை அனைத்தும் இரகசியமே! இரத்தினமே! இரத்தினத்தின் திறமையை, இலட்சிய நோக்கோடு, வெளியிட்டால் சிகரத்தை உன் சிறு பையில் அடக்கி விடலாம்.
உன் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் முதல் நபர், நிச்சயம் நீயாகாத்தான் இருக்க முடியும். உன்னை உனக்குள் தேடு. நீ யார்? எனக் கேட்டுக் கொள். மனம் சொல்லும் கேட்டுச் சொல்.
பாதையை தேர்ந்தெடுத்தவனுக்குத் தான் வழியும் பிறக்கும். பாதைகள் அற்ற இடம் இருந்தும் வீணே. உன் பாதையைத் தெரிவு செய்துவிட்டால், தயங்காமல் நடக்கலாம். ஒதுங்காமல் ஓடலாம். நித்தம் நித்தம் மனதை புதிதாக்கு. தினமும் புதிதாய் தான் பிறக்கிறோம்.
வறுமை உன் திறமையை மறைக்கலாம். வறுமை நோய் எப்போதும் உன் திறமையைக் கொன்று விடாது. அதை மேலும் வரவேற்றும்.
இலட்சியத்திற்கு தினம் உன் நேரத்தை ஒதுக்கு. சிந்தனை செய். சீரிய வழி பிறக்கும். கண்டறிந்த இலட்சியத்தை கவனத்துடன் கொண்டு செல். கனிவாய் பேசு.
கவனமெல்லாம் குறிக்கோளில் இருக்க வேண்டும். அக்கவனத்தை சிதறடிக்க படையெடுத்து வரலாம். உன் அம்பெடுத்து தடைகளை நொருக்கு. வேகமாய் செல். வேகம் கொண்டால், அனைத்தும் பின்னோக்கி ஓடும். ஓய்ந்துவிட்டால் தலைமுறையே சாடும். உன்னை செதுக்கிக் கொல். உலகம் உயர்த்தி விடும்.