கணக்கில் குழப்பம் புதிய புதிர்
சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு
சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள்.
50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன்
வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள்.
மறு நாள் அதே கடைக்கு சென்ற அவள் 50$ நகையை கொடுத்துவிட்டு
100$ பெறுமதியான நகையை வங்கினாள். 100$ பெறுமதியான
நகைக்கு மீதி 50$ செலுத்தாமல் அவள் விரைவாக கடையை விட்டு
வெளியேறினாள். கடை உரிமையாளர் மீதி பணத்தை கேட்க அவள்
அளித்த பதில் கடை உரிமையாளரின் கணக்கில் குழப்பதை ஏற்படுத்தியது.
அப் பதிலால் குழப்பமடைந்த கடை உரிமையாளரோ கைவிரல்களை மடக்கிக்
கொண்டிருந்தார்
கடை உரிமையாளரின் கணக்கில் குழப்பதை ஏற்படுத்தும் விதமாக அவள்
என்ன பதிள் அளித்திருப்பாள்……
விடை
நேற்று நான் உங்களிடம் 50$ பணம் செலுத்தினேன். இன்று உங்களுக்கு 50$
பெறுமதியான நகையையும் கொடுத்துவிட்டேன். ஆக மொத்தம் 100$ ஆகி
விட்டது. எனவே நான் மீதி பணம் ஏதும் தர வேண்டியதில்லை என் அப் பெண்
கூறி விரைவாக கடையை விட்டு வெளியேறினாள்.