Home » படித்ததில் பிடித்தது » மர்மக் காடு!!!
மர்மக் காடு!!!

மர்மக் காடு!!!

ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர்.

யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது.

இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.

மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் பறிகொடுத்தது. மெர்லினை வேறு யாரும் தட்டிச் சென்று விடாமல் தனக்கு மட்டுமே உரியவனாக வைத்திருக்க நினைத்தது அந்த தேவதை.

அந்த மந்திரவாதியை சுனைக்குள் கண்ணுக்குத் தெரியாத, தண்ணீரால் நிரப்பப்பட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தது.

இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்தச் சுனையில் எதையாவது நினைத்து சீட்டு எழுதிப்போட்டால் உடனே நடக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

இந்த அடர்ந்த பெரிய காட்டில் ஒரு குட்டை உள்ளது. அதில் எப்போதும் நீர்க்குமிழிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்தத் தண்ணீர் நம் ஊரில் இருப்பதைப் போல சூடாக இல்லாமல் ஜில்லென்று குளிர்ச்சியாகவே இருக்கிறது.

இவ்வாறான நீர்க்குமிழிகள் குட்டையில் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக் காட்டில் வருவதுதான் வியப்பளிக்கிறது.

மேலும், இக் குட்டையைச் சுற்றி சில பாறாங் கற்களும் கிடக்கின்றன. அதில் குறிப் பிட்ட பாறாங்கல் ஒன்றை மட்டும் மிகவும் விசேஷ மாகக் கூறு கின்றனர். காரணம், குட்டையின் நீரை அள்ளிச் சென்று இந்தப் பாறாங்கல்லின் மீது சிறிதாகத் தெளித்தால் நம்பவே முடியாத அற்புதம் ஒன்றும் நிகழ்வதாகக் கூறுகின்றனர்.

அது என்ன அற்புதம்?

தண்ணீர் தெளித்த மாத்திரத்திலேயே அந்தப் பகுதியில் மட்டும் வானம் உடனடியாகக் கருத்து விடுகிறதாம். காற்று வேகமாக வீசுமாம். கருப்புக் குதிரையில் கருப்பு நிற ஆடை அணிந்த சில துர் தேவதைகள் அங்கே உடனடியாக வருகிறதாம்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வில்லை.

ஆனால். இதனைச் சோதனை செய்து மிரண்டு போனதாகச் சிலர் சொல் கின்றனர்.
இப்படிப்பட்ட திகில் நிறைந்த காட்டிற்கு டுசெல்டிக்ட் என்ற அந்தப் பழங்குடியின மக்கள் இப்போதும் எந்தப் பயமும் இல்லாமல் சென்று வரத்தான் செய்கின்றனர். மந்திரங்களை ஜெபிக்கின்றனர். அதனைப் பரிசோதித்துப் பார்க்கவும் செய்கின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் ஜுன் மாதம் 21ம் தேதி அன்று இந்த மக்கள் சுனைக்கு வருகின்றனர். பிறந்த குழந்தைகளை சுனை நீரில் நீராட்டும் தங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சடங்குகளை இன்றும் தவறாமல் செய்து வருகின்றனர்.

இதனைப் பெரிய சடங்காகவே அவர்கள் செய்கின்றனர். என்றாலும் இந்த விழாவில் வெளியாட்கள் யாரையும் அவர்கள் அனுமதிப்பதே கிடையாது.

இக்காட்டில் திடீர் திடீரென்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிவதும் உண்டு. ஆனால், சாதாரணமாக காற்றில் மரங்கள் ஒன்றோ டொன்று உரசி தீப்பற்றிக் கொள்வதைப் போல இங்கே நடப்பதில்லை. ஆனால், தீப்பற்றி எரிகிறது.

என்ன காரணத்தினால் இவ்வாறு நெருப்பு பற்றி எரிகிறது என்பது தெரியவில்லை. ஆனால், நகரசபை ஊழியர்கள் மட்டும் நெருப்பை அணைக்க ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ப்ரோசல்யான்டே காடு இருப்பது வளர்ந்த நாடாகக் கருதப்படும் ஐரோப்பாவின் பிரான்சில். படித்தவர்களும், அறிவாற்றல் நிறைந்தவர்களும் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தான் இக்காடு உள்ளது.

இப்படிப்பட்ட மர்மங் களும், திகிலும் நிறைந்த ஒரு பயங்கரமான காட்டைப் பற்றிய அச்சம் காரணமாக இன்றளவும் இந்தக்காடு ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top