முதல் அலாரம் கடிகாரத்தை அமெரிக்காவிலுள்ள கன்கார்ட் நகரத்தைச் சேர்ந்த லெவி கட்ச்சின்ஸ் 1787ல் கண்டுபிடித்தார். பணத்தின் மீது நாட்டம் இல்லாததால் அதற்கான உரிமத்தை அவர் வாங்கவே இல்லை!
நம் வயிற்றில் மியூகஸ் படலம் இல்லாமல் இருந்தால், ஜீரணமாகி விடும்!
12 லட்சம் கொசுக்கள் தலா ஒருமுறை நம்மைக் கடிப்பதாக (பயங்கரமாக) கற்பனை செய்தால், ஒரு துளி ரத்தம் கூட மீதம் இருக்காது!
நாய்கள், பூனைகளுக்கும் மனிதர்களைப் போலவே இடதுகை பழக்கம் உண்டு. துருவக்கரடிகள் அனைத்துமே இடதுகை பழக்கம் உடையவை.
வண்ணத்துப்பூச்சிகள் கால்களின் மூலமாக சுவை அறிகின்றன.
நாம் உரையாடுகையில் 72 வெவ்வேறு தசைகள் செயல்படுகின்றன.
ஆந்தையால் தன் தலையை 270 டிகிரி அளவுக்குச் சுழற்ற முடியும்.
எறும்புகள் ஒருபோதும் உறங்குவதில்லை என்பது உண்மையல்ல. எறும்புகளும் உறங்கும்!
டால்பின்கள் ஒரு கண் திறந்தவாறு உறங்கும். உறக்கத்திலேயே நீந்தவும் செய்யும்.
ஒருவரது புருவத்தில் சராசரியாக 550 முடிகள் உள்ளன.
கண்கள் திறந்த நிலையில் தும்ம முடியாது.
சிறு குழந்தைகள் சராசரியாக தினமும் 200 மீட்டர் தூரம் தவழ்கின்றன.
111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
தீக்குச்சிகளை எரிய வைக்கும்போது கிடைக்கிற அளவு வெப்பம் பனிப்பாறைகளிலும் உள்ளது.
நம் மூச்சுக்காற்றே பனித்துகளாக மாறிவிடும் அளவு சைபீரியாவில் குளிர் நிலவுகிறது.
நிறைய மின்மினிப்பூச்சிகளை விழுங்கிவிட்டால், அந்தத் தவளையும் சிறிதுநேரம் மினுமினுக்கும்!
48 வினாடிகளில் ஒரு நல்ல அயர்ன் பாக்ஸ் அதிகபட்ச வெப்ப நிலையை எட்டி விடுகிறது.
ஐரோப்பா, அமெரிக்காவில் கழிவறை பயன்படுத்திய பிறகு 90 சதவீத பெண்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்கிறார்கள். ஆண்களில் இது 75 சதவீதம்தான்!
குளிக்கும் விஷயத்திலோ இது தலைகீழ். 70 சதவீத ஆண்கள் தினமும் குளிக்கிறார்கள். பெண்களில் இது 57 சதவீதம்தான்!
நமது வயிறு முழுக்க நிறைந்துவிட்டது என மூளை அறிய சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால், அதற்குள் நாம் நிறைய சாப்பிட்டு விடுகிறோம்!
மரபணு பெருக்கத்தின் (மியூட்டேஷன்) விளைவே சிலரது நீலக்கண்கள். அதற்கு முன், பொதுவாக கண்கள் பழுப்பு நிறத்திலேயே காணப்பட்டன.
200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதைத் தாண்டியும் வாழ்கிறார்!
பூமியின் சுழற்சி வேகம் ஒரு நூற்றாண்டுக்கு 17 மில்லி செகண்டுகள் குறைகிறது.
தண்ணீரை வேதியியல் மாற்றம் மூலமாக எரியக்கூடிய ராக்கெட் எரிபொருளாகக்கூட மாற்ற முடியும்.
பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு 473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ சராசரியாக 8 ஆயிரம்!
காகங்களால் தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!
1850ம் ஆண்டு வரை இடது, வலது ஷூக்கள் கிடையாது. இரண்டுமே ஒரே மாதிரியானவை!
பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்த்ததற்குக்கூட பெண்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நம் உடலில் 98 சதவீதம் அணுக்கள் மாற்றமாகின்றன.
மனச்சோர்வினால் அவதிப்படு கிறவர்களுக்கு மற்றவர்களைவிட 3-4 மடங்கு அதிக கனவுகள் ஏற்படுகின்றன.
ஜப்பா னில் ஆண்டுதோறும் 2400 கோடி சாப்ஸ்டிக் குச்சிகள் (ஜோடி) பயன்படுத்தப்படுகின்றன. சீனாவிலோ 4500 கோடி. இதற்கு மட்டுமே இரண்டரை கோடி மரங்கள் தேவை!
உலகில் 7500 தக்காளி ரகங்கள் உள்ளன.
வயதான பெற்றோரை அவ்வப்போது வந்து சந்திக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் சீனாவில் அமலாக உள்ளது.
2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.
25 ஆயிரம் பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்!
ஒரு அலுமினிய டப்பாவை மறு உபயோகம் செய்வதன் மூலம், ஒரு டிவியை 3 மணி நேரம் இயங்கச் செய்யும் அளவு சக்தியைச் சேமிக்கிறோம்.
பசு மாடுகள் மனிதர்களைவிட 200 மடங்கு அதிக வாயுவை வெளியிடுகின்றன.
சராசரி மனிதன் படுக்கையில் விழுந்த 7 நிமிடங்களில் உறங்கி விடுகிறான்.
உலகை 150 முறை சுற்றிவரும் அளவுக்கு நீளமான சாலைகள் அமெரிக்காவில் உள்ளன.
நீங்கள் விழித்து எழுந்தவுடன் ஒரு சிறு பல்பு எரியக்கூடிய அளவு மின்சக்தியை, மூளை உண்டாக்குகிறது.
நம் ரத்தத்தில் உள்ள இரும்பானது, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பல ட்ரில்லியன் மைல் தொலைவில் உருவானது!
காதல் வயப்படும் ஜென்ட்டோ பெங்குவின், தன் காதலிக்குப் பரிசளிப்பதற்கான சிறிய கல்லை கடற்கரை முழுவதும் தேடித் தேர்ந்தெடுக்கும்!
ஒரே ஒரு முனையில் பொருந்தியுள்ள, நம் உடலின் ஒரே ஒரு தசை நாக்கு மட்டுமே!
உலகில் 50 சதவிகித பெண்கள் அனுப்டபோபியா என்ற பிரச்னைக்கு ஆளாகின்றனர். ‘திருமணம் ஆகாதோ’, அல்லது ‘தவறான நபரைத் திருமணம் செய்து கொள்வோமோ’ என்ற பயத்தையே இந்த போபியா குறிக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது அமெரிக்காவில் அதிக மரங்கள் இருக்கின்றன.
திருமணம் ஆகாதவர்களில் 58 சதவீதம் பேர் ‘வாலண்டைன்’ஸ் டே’வை விரும்புவதில்லை!
சமீபத்தில் வாழைப்பழம் சாப்பிட்டவர்களை கொசுக்கள் நெருங்கி வரும்.
வாழ்வின் துயரமான நினைவுகளை மறையச் செய்யும் லேசான மின் அதிர்ச்சி சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கேன்சர் செல்களை ஓரளவு அழிக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு என சமீபத்திய ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது.
நமது தொப்புளில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிக பாக்டீரியா வகைகள் உள்ளன.
வீடியோ கேம்ஸ் ஆடுவது மனச்சோர்விலிருந்து விடுபட ஓரளவு உதவும்.
பாலூட்டிகளிலேயே மிக மெதுவாக வளர்ச்சி பெறுவது மனிதனே!
கேரட்டின் நிறம் ஒரு காலத்தில் ஊதாவாக இருந்தது.
பேஸ்கட் பால் ஆட்டம் தோன்றியபோது, பந்தின் நிறம் பிரவுன் ஆக இருந்தது. பிற்காலத்தில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது.
காலபோகஸ் தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும்.