Home » பொது » குற்றாலம் போலாமா ?
குற்றாலம் போலாமா ?

குற்றாலம் போலாமா ?

திருநெல்வேலில இருந்து பைக் எடுத்துட்டு கிளம்பனும். ஒரு மணி நேரம்.. நேரா குற்றாலம்.. மெயின் அருவி எப்படியும் கூட்டமா இருக்கும். நேரா மேல செண்பகாதேவி அருவிக்கு மேல நடக்க ஆரமிச்சிரன்னும்.. வழில நெல்லிக்கா, மாங்கா , பலாப்பழம் எல்லாம் வாங்கிட்டு அத தின்னுகிட்டே நடக்கணும். குரங்கு வரும்.. அதுக்கு ரெண்டு கடலைய குடுத்துட்டு ஒருத்தருக்கொருத்தர் கலாய்ச்சிக்கிட்டே மல மேல ஏறணும். அருவி கிட்ட நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் னு அருவி சத்தம் தூரமா கேக்க ஆரமிக்கும்.. நடையின் வேகம் அதிகரிக்கும்… கண்ணுல அருவிய பாத்ததும் குடு குடுன்னு ஓடுவோம்.. நீ எங்க டிரஸ் லாம் பாத்துக்கோன்னு ஒருத்தன் தலையில கட்டிட்டு அப்படியே அருவில போய் நின்னா அப்படியே சப்த நாடிகளும் அடங்கிரும். ஒரு ஒருமணி நேரம் எந்த போலீசு குச்சிய வச்சி விரட்டினாலும் நாங்க வெளிய வருதாப்புல இல்லைங்கோ…

சூப்பரா ஒரு குளியல்.. உடம்பெல்லாம் செவந்துரும்.. அங்க உள்ள செண்பகாதேவி அம்மன் கோவில் குள்ள போய் ஒரு அட்டென்டென்ஸ் போட்டுட்டு நெத்தி ல பட்டைய பூசிட்டு, அடுத்து வேற என்ன மிளகா பச்சி தான். சில பல பச்சிகள உள்ள தள்ளிட்டு கீழ இறங்க ஆரமிக்க வேண்டியது தான். பாக்கெட்ல எவ்ளோ காசு இருந்தாலும் எலே எலே மாங்கா வாங்குல, நெல்லிக்கா வாங்குலன்னு நண்பன் கிட்ட நச்சறிச்சி வாங்கி திங்கறது தனி சுகம் தான். அந்த பொங்குமா கடல எட்டி பாத்துட்டு, கீழ இறங்கினதும் சிற்றருவி.. வேணாம் அது சின்ன பிள்ளைங்க குளிகிறது. வண்டிய நேரா ஐந்தருவிக்கு விட வேண்டியது தான்.

குற்றாலம் டு ஐந்தருவி போகுற வழியே தனி அழகு.. அந்த ரோட்ல வண்டி ஓட்டிட்டு போனா ஒரு கர்வம் ஒட்டிகிடும். மலைல அங்க அங்க அருவி உறவாகி விழுற அழகு கண்ணுக்கு அத விட குளிர்ச்சியான காட்சி ஏதும் கிடையாது.. வழில நொங்கு வாங்கி அதையும் உள்ள தள்ளிட்டு மறுபடியும் அந்த அருவி இரைச்சல் சத்தம் கேக்கும்போதே உள்ளுக்குள்ள ஒருவிதமான ஆனந்தம்.. உடம்பெல்லாம் புல்லரிக்கும். தென்றல் அப்டிங்கிறது எவ்வளவு அழகான அனுபவிக்க வேண்டிய வார்தைன்னு அப்பத்தான் புரியும் . உள்ள போலாமா?? மொதல் தடவ குளிக்க வந்துருக்கும் குட்டீஸ் எல்லாம் ஓரமா ஒரு குட்டி அருவில விளையாடி கூதுகலமா துள்ளி குதிச்சி கிட்டு இருப்பாங்க. இப்போ இந்த அருவில ஒரு ஒரு மணி நேரம். மூச்சி தெவுங்காம ரொம்ப நேரம் அருவிகுள்ள நிக்கிறது ஒரு தனி கலை. இங்க ஒரு புள்ளையார் கோயிலு. அவருக்கு ஒரு அட்டென்டென்ஸ்.

மணி ரெண்டு ஆய்டும். இப்போ சூடா புரோட்டா சால்னா.. எத்தன உள்ள போகுதுன்னு கணக்கே கிடையாது. நண்பா பில்லு குடுத்துடு இன்ன. அதுகுன்னே நம்ம கூட்டத்துல ஒரு நல்லவன் இருப்பான்.

நெக்ஸ்ட் பழைய குற்றாலம் போலாமா இல்ல புலி அருவி போலாமா? இந்த செண்பகாதேவி க்கு மேல இன்னும் தேனருவி பாலருவி இருக்காமல அங்கயும் போயிர்கலாம். எங்க போறதுன்னு ஒரே குழப்பம். சரி செங்கோட்டை பக்கத்துல குண்டாறு அணை க்கு மேல கண்ணுபுளி மெட்டு ன்னு ஒரு அருவி இருக்கு அங்க போலாம். குண்டாறு அணை வரைக்கும் தான் பைக் போகும். அப்றோம் ஜீப் ல தான் போகணும் இல்லனா நடக்கணும் ஒரு மூணு கிலோமீட்டர் காட்டுக்குள்ள.. கூட்டமே இல்லாத அமைதியான இடத்துல அழகான அருவி. அங்க ஒரு ரெண்டு மணி நேரம் குழிச்சிட்டு பாறை மேலல்லாம் ஏறி இறங்கி ஆட்டி ஆட்டி ஜீப் கீழ கொண்டு வந்து விட மணி ஆறு ஆய்டும்.

செங்கோட்டை வந்துட்டு பார்டர் புரோட்டா வ சுவைகாம போக முடியுமா… ஒவ்வருத்தரும் எவ்ளோ சாப்ட முடியுமோ அவ்ளோ சாப்டுட்டு திருநெல்வேலி நோக்கி வண்டிய விட வேண்டியது தான் . இனிமே தான் கவனமா இருக்கணும். ஏன்னா அருவில குளிச்சது கண்ணு அப்படியே சொக்கும். வீட்டுக்கு வந்து தூங்கினா அடுத்து ரெண்டு நாளைக்கி எந்திக்கவே தோணாது அப்படி ஒரு தூக்கம்.. உடம்பே லேசா ஆகிடும்….

போலாமா ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top