விழிப்புநிலையால் உண்டாகும் பயன்கள் :
1. விழிப்பு நிலையால் தனக்கும் பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் ஊரு ஏற்படுத்தாத வகையில் செயலாற்ற வேண்டுமென்ற அருளுணர்வு ஏற்படுகிறது .
2. அறம் இயல்பாக மலர்கின்றது. அறப்பண்புகள் உயர் பண்புகளாகின்றன.
3. விழிப்பு நிலையால் உயிராற்றலின் வீண் செலவு குறையும் .
4. தன்முனைப்பு நீங்கி, ஆறுகுண எழுச்சிகள் அடங்கி சீர்மை பெரும். பழிச்செயல்கள் விளையா . மனதிற்கு அமைதி கிட்டும். அறிவு நாளுக்கு நாள் தெளிவடையும்.
5. தன்னையே ஆய்வு செய்வதும், தெளிவு பெறுவதும், நல்வினை ஆற்றுவதும் இயல்பாகிறது. இதுவே விழிப்புநிலையின் முழுமை .
6. விழிப்பு நிலையோடிருக்கும் போது மனிதன் பேரறிவாக இருக்கவும், இயங்கவும்,வாழ்க்கையில் சிக்கல்கள் துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கி கொள்ளவும் முடியும்.
7. மனதையும் வாழ்வையும் கேடுறாமல் காத்துத் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் . தெய்வநிலையை உணர்ந்தும் கொள்ளலாம்.
“உண்ணுங்கால் எண்ணு உண்ணும் உணவு உனக்கு .
கிடைத்தவகை எண்ணியுண்ணிடல் என்றும் உன் கடன் “.
“மனித மனத்தைப் பற்றி மனிதர் அறியாமல்
மயங்குகிறார், மயக்குகிறார் உண்மை எங்கு காணும்.
மனம் என்றால் சீவகாந்த அலையன்றி வேறோ
மனம் நிலைத்தால் அறிவு அதே இறைவெளி மெய்ப்பொருள் “.
“உன்செயலை இன்ப துன்ப உணர்வுகளையெல்லாம் உள்ளிருந்து வாங்கிக் கருமையத்துள் வைத்து ,
உன் மனது உள் திரும்ப ஒவ்வொன்றாய்க் காட்டி
உன்னை வழி நடத்துவது உண்மை தெய்வமன்றோ …”
இன்பம் பெருகிட துன்பம் விளைந்திடும் .”
–வேதாத்திரி மகரிஷி