அமுதனின்பின் மண்டைக்கு நேராய் அந்த கரிய உருவத்தின் இரும்பை ஒத்த கை மேல நன்றா ஓங்கி அடிக்க தயாரானது. திடீரென அமுதன் திரும்பினான். இவ்வளவு நாள் பயத்தையே காணாத அவனுக்கு பேயின் உருவத்தினை கண்முன்னே மிக அருகில் பார்த்தான். அவன் சிறிய வயதில் அவனது அண்ணன் , பக்கத்துக்கு வீட்டு அக்கா ஏரிக்கரையோரம் கண்முன்னே பார்த்தாய் சொன்ன அத்தனை அடையாளங்களும் அப்படியே ஒத்திருந்தது.
அவனுக்கு பயப்பட கூட நேரமில்லை அடி இடது காதின் கீழ்புறம் விழுந்தது. கட்டிலில் படுத்திருந்தவனின் உடல் நேராய் இருந்த சுவற்றில் அடித்து மூளை வெளிவரும் அளவுக்கு அடி இருந்தது.அவனது இடப்புறம் காதின் இடத்தில பெரிய துளை இருந்தது.அதிலிருந்து ரத்தம் நீரென வடியதொடங்கியது.
“டேய் அமுதா… அத நெனைக்காதடா…”
“அமுதனின் உள்மனம் திட்டியது.இந்த மாதிரி பைதியக்காரத்தனமாநேனைக்கதடா.”
ஆனால் அமுதானால் எள்ளளவும் தூங்கமுடியவில்லை..அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
நினைவுகள் அமுதனின் மனதில் ஒரு வித திகிலோடு ஓடிக்கொண்டிருக்க அவனது சிறு வயது நண்பர்களுடன் அந்த வாய்க்கா மேட்டினை ஏறினான்.
அந்த வாய்க்கா கரையின் மீது ஏறியவுடன் அமுதன் மனம் ஓரளவு சம்பவத்தை மறந்திருந்தது. அந்த மூன்று பேருக்கும் பெரிதாய் நீச்சல் தெரியாது. அதனால் நீரின் ஓட்டத்திலேயே நீந்தி விளையாடுவர்.வாய்க்காலில் சைபர் எனும் ஓர் இடமுண்டு. அங்கு நீரானது நிலத்திற்கு அடியில் சென்று பின் மேலெழும்பி செல்லும்..வாய்க்காலின் குறுக்கே பாதை வரும் போது அந்த சைபர் வசதியாய் இருக்கும்.
தண்ணீர் மேலெழும்பி வரும் போது ஒரு வித வேகத்துடன் வரும். மற்ற இரு நண்பர்களும் சட்டென்று நீரை பார்த்ததுமே குதித்துவிட்டனர். ஆனால் அமுதன் ஆடைகளை களைந்து எதோ ஒரு
யோசனையில் எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.குறும்புகார விஜி அவனை பின்னே வந்து தண்ணீருக்குள் தள்ளினான்.
தனது தலையை ஆட்டிக்கொண்டே தன்னிலை மறந்து இலையினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தா அமுதன் அந்த இல்லை இரண்டு முறை தண்ணீரில் மூழ்கி மேலெழும்பியது மூன்றாம் முறை மூழ்கும் போது அமுதனும் விழுந்தான். தள்ளியது நண்பன் தான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது. கற்பனையில் மூழ்கி இருந்த அவனுக்கு பதட்டப்பட யோசிப்பதற்குள் அவன் முதுகு தண்ணீருக்குள் மூழ்கி விட்டது.தண்ணீரில் குளிரேதும் தெரியவில்லை. பலமுறை அங்கு குதித்து பழகியவன் போல அவனுடல் உள்சென்றது.
பாதம் தரையை தொட்டு உந்தியதும் அவனுடல் மேல வர ஆரம்பித்தது. கைகளை நன்கு விரித்து தண்ணீருக்குள் அமிழ்தினான். உடல் சட்டென்று மேல வந்தது. முகம் சூரிய ஒளியினை உணர்ந்தது ஆனால் விழியும், உடலும் அவனை எச்சரித்தன. உயிரோ உன்னை விட்டு போய்விடுவேன் என்று பயமுறுத்தியது.எங்கு இருக்கிறோம் என உணர்வதற்குள் தன் பின்னாலிலிருந்து யாரோ தன்னை அவர்வசம் இழுப்பதை உணர்ந்தான்.
தொடரும்…