“மச்சான்.. எங்க கேப்டன் சரியான சைகோ டா…” என ஆரம்பித்து புலம்பிக்கொனே வந்தான் அமுதன்.
கார்த்திக் அதை காதிலே வந்காதவனை போல சிறிது தூரம் சென்றதும் ” நான் தண்ணி முடுசிட்டு வரேன்.. நீ ரூம் கு போ..” என கழன்று கொண்டான்.
கால்கள் பயங்கரமாக வலிதததால் அமுதன் மெல்ல ஒவ்வொரு அறையாக கடந்து போய்க்கொண்டிருந்தான், அவன் மெதுவாக வரட்டும். அதற்குள் நாம் அவனையும், அவன் கல்லூரி விடுதியை பற்றியும் தெரிந்து கொண்டு வருவோம்.
அமுதன், பெயருக்கேற்றவாறு நல்ல குணமுடையவன். 5 அடி 2 அங்குலம் உயரம். மாநிறம். சுருட்டை முடி. யார் வம்புக்கும் போகாதவன். அதற்கு அவனுள் இருந்த பயம் ஒரு முக்கிய காரணமாய் இருந்தது. அதனால் எல்லோரிடமும் நண்பனை இருந்து வந்தான். வீட்டில் கடைசிப்பையன் என்பதால் செல்லம் அதிகம். அண்ணன்கள் , அம்மா , அப்பா என நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன்.
திண்டுக்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரி எப்படியோ எண்ணிக்கையற்ற மரங்கள், எப்போதும் வீசும் காற்று என விடுதி அருமையாக இருந்தது.. அது அமுதனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மூன்றாவது மடியில் ரூம் எடுத்து அரியர் ஏதும் வைக்காமல் சராசரி மாணவனாய் படிதான்.
இவ்ளோ நேரம் ஆகியும் இப்போதான் படியேற ஆரம்பிக்கிறான் அமுதன்.. வாங்க அவன்கூட பொய் சேர்ந்து கொள்வோம்.
மெதுவாய் ஒவ்வொரு படியாக யோசனை செய்த படியே ஏறினான் அமுதன். படிகட்டானது மேற்குப்புறமாக மேலேறி பின் கிழக்குப்புறமாக சென்றது. அவ்வாறு திரும்பும் இடத்தில் வரிசையாக கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தன. அதற்கு போகும் வழி மிக சிறியதாகவும் இருந்ததாகவும் இருந்தது.
அதன் வழியே பார்த்தால் இறுதியில் ஆலமரக்கிளையானது தென்படும்.
அமுதன் மேற்சொன்ன இடத்தை அடைந்ததும் யாரையோ தேடுவதை போல தேடினான். பின் மெதுவாய் கிழக்கு புறமாய் திரும்பி மேல ஏற முற்பட்டு பின் கழிவறைக்கு செல்லும் சின்ன சந்தை பார்த்தான். அப்பாதை 10 மீட்டர் தூரம் இருக்கும். ஒரு டியுப் லைட் மட்டும் எரிந்தது. மற்றொன்று எரியாமல் இருளைகூட்டி பயமுறுத்தியது. அமுதன் திரும்பி சுவிட்சை பார்த்தான்.
அது ஏற்கனவே போடப்பட்டிருந்தது. இறுதியில் தென்பட்ட ஆலமரத்தின் கிளையை பார்த்தான் அதில் யாரோ அமர்ந்து இவன் விழியையே உற்று பார்த்து கொண்டிருந்தான். அமுதன் மூளை குழம்பிப்போயிற்று அவன் யார் யார் என்று நெற்றியை சுருக்கி யோசித்து உற்று பார்த்தான். “ச்ர்ர்ர்ர்….” என்ற சத்தம் திடீரென அவன் காதை கிழிப்பது போல் இருந்தது. அமுதன் வெகுவாக பயந்து கால்கள் தானாக ஆடதொடங்கின.
தொடரும்…