Home » உடல் நலக் குறிப்புகள் » ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!
ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!

ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!

ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான்.

சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது.

கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது, துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்.

நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம்.

இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர்.

அறிவியல் மகத்துவம்:

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.

தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது.சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top