வீட்டின் அழைப்பு மணி அலறியது….
ஓரிரு நிமிட இடைவெளியில் வந்து கதவைத் திறந்தாள் பவித்ரா…
மிஸ் பவித்ரா நீங்கதானே…. வந்திருந்த பெண் பவியிடம் கேள்வியைக் கேட்டாள்…
வீட்டிற்குள் வர முன்னரே என் பெயரை அறிந்து வைத்திருக்கின்றாள்…யாரோ என்ற சிந்தனையுடன்… மெதுவாக….தன் அடித்தொண்டையால்…
ஆ….ம… ஆமா என்றாள்….
ஓ… ஹாய் என் பேரு சுலக்சனா… உள்ள வரலாமா என்றாள்…
திடு திப் என வந்திருக்கும் இவள் உள்ளே வரலாமா என்றதும் ஆம் என்பதா இல்லையா என்பதா என்று சிந்திக்கக்கூட பவிக்கு அவகாசம் இல்லை… இதோ அவளே உள் நுழைந்தாள்….
ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த பவித்ரா….. அடி மனதில் எழும் கேள்வியை மெதுவான முனக்கத்துடன் கேட்க முட்பட… முந்திக்கொண்ட சுலக்சனா…
ஓ.. என்னடா யாரிவ…. நேரா வீட்டுக்குள்ள வந்திருக்கா…பெயரெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா என்று யோசிக்கிறிங்களா…
ம் … என்னங்க வந்த விருந்தாளிக்கு ஒரு கப் தண்ணியாவது தருவிங்களா… என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க….வழிந்தோடும் வியர்வையை முந்தானை நுனியால் துடைத்த பவி… ஓ… வெயிட்…இதோ வாறன்…..என்று சமையலறையை நோக்கி நகர்ந்தாள்…
உரிமையுடன் .. சோபாவில் அமர்ந்து கொண்டாள் சுலக்சனா…
குளிரான பானத்துடன் விரைவாக வந்தவள் சுலக்சனாவிடம் அதனைத் தந்தாள்…. ஓ நன்றிகள் என்று வாங்கிக்கொண்டவள்..
ஒரே மடக்கில் குடித்துவிட்டாள்… எல்லாமே ஆச்சரியம் தான்…
தன்னைத் திடப்படுத்திக்கொண்ட பவி…
எக்ஸ்க்யுஸ்மி… நீங்க யாருன்னு எனக்கு தெரியலயே….என்றாள்…
ஓ… ரவி சொல்லவே இல்லையா…. ஹி இஸ் லைக் திஸ்… அவன் எப்பவுமே இப்படித்தான்…
ர…வி… ரவியை எப்படி…? ஒரு வித தயக்கத்துடன் கேட்டாள் பவி..
ஓ.. ரவி என் ப்ரென்ட்…
ப்ரென்ட்டா எப்போதிருந்து…
ம்… ஒரு ஆறு மாசம்…
அப்படியா…நீங்க அவர் கூட வேலை பாக்கிறிங்களா…பவியின் நியாயமான கேள்வி…
ம்…இல்லை பவி…. சுலக்சனாவின் உடனடியான பதில்
அப்போ எங்கே வைத்து…
ம்…என்னங்க அவசரப்படுறிங்க ரவி வந்தா சொல்லாமலா விடப்போறான்…
இந்த மறுமொழிக்கு என்ன பதில் கூறுவது பவித்ராக்கு தெரியவில்லை…
பை த வே.. பவி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்… ம்… நீங்க ஓகேன்னா கொஞ்ச நேரம் உங்க பெட்ட யூஸ் பண்ணிக்கலாமா…
ஓ…..ஓகே ஓகே.. வாங்க என்று சுலக்சனாவை அழைத்துச்சென்றாள் பவித்ரா…
தனது அறையில் அவளை தங்க வைத்துவிட்டு….
சமையலறையில வேலை இருக்குது…நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அப்புறம் வாறன் என்று சொல்லிவிட்டு … தன் வேலைகளைத் தொடரச்சென்றாள் பவித்ரா…
வெட்டிக்கொண்டிருந்த…காய்கறிகள் அப்படியே இருந்தது…தன் வேலைகளை ஆரம்பித்தாள் பவி… கையில் கத்தி…தட்டில் வைத்து வெங்காயத்தை நொறுக்க ஆரம்பித்தவள் மனதுக்குள் மெல்லமாக சிந்தனை ஆரம்பித்தது…
தப்பு பண்ணிட்டேனா… ஐயோ இல்லையே…அவ ரவியைத் தெரியும் என்றாளே… ம் … எப்படித் தெரியும் என்டா ப்ரென்ட் என்கிறா…திருப்பிக்கேட்க முடியுமா… ஏன் சந்தேகமா என்று கேட்டால்…சீ சீ … ரவி மேல் சந்தேகமா…சந்தேகமாயிருந்தால் அம்மா..அப்பா..வீடு வாசல் எல்லாம் விட்டு…தாலியே கட்டாமல் இவனோடு குடித்தனம் நடத்துவதா… நோ நோ…. ரவியை சந்தேகப்பட வில்லை… பட்….யாரிவ… ம் … ரவி வரட்டும்…
தன் மனதுக்குள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு விடை அவளிடமே இருந்ததனால்… சுலக்சனா விடயத்தை அவள் மறந்து விட்டாள்….. சமையலும் ரெடி…. நேரம் 3.00 மணி… வந்தவளை சாப்பிட அழைக்கும் நோக்கத்தில் அறைக்கதவைத் தட்டினாள் பவித்ரா…
யெஸ் கம் இன்…
உள்ளேயிருந்து சுலக்சனாவின் குரல்…
கதவைத்திறந்து உள்ளே நுழைந்த பவி ஒரு கணம் அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்…. பயத்தில் கீழே விழுந்த தன் முந்தானையை படபடப்புடன் தோளில் தூக்கிப் போட்டவள்…
நான் அப்புறம் வாறன் என்று திரும்பினாள்….
அவள் எதிர்பார்க்கவில்லை….அவள் தோள்களைப்பிடித்து நிறுத்தினாள் சுலக்சனா…
என்ன பவித்ரா…ஏன்…என்னாச்சு…எனி ப்ராப்ளம் என்றாள் சாதாரணமாக….
திரும்ப மனமில்லாத பவி..இல்லை நீங்க ட்ரெஸ் மாத்திக்கிட்டிருக்கிங்க அப்புறம் வாறன்..
ஓ..மை காட்… என்ன நீங்க ஆம்பள மாதிரி
வெட்கப்படுறிங்க…என்னங்க நாம ரெண்டு பேரும் கேர்ள்ஸ் தானே…
சர்வ சாதாரணமாக தன் நியாயத்தைக் கேட்டாள் சுலக்சனா…
அது சரி… ஆனா நீங்க ட்ரெஸ் மாத்தும் போது..நான் ….
ஏய் ஏய்… சிலி கேர்ள்… கம் …. இன்…. என்று அவள் கையைப் பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தாள் சுலக்சனா…
ஆடையை இனித்தாள் அவள் அணிய வேண்டும்… சீ என்ன இவள் உடம்பில் ஒரு துணியை சுத்திக்கலாமே…. தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டாள்….பவித்ரா…
சர்வ சாதாரணமாக கீழாடையை அணிந்து கொண்ட சுலக்சனா தன் சுருக்கு விழுந்த கூந்தலைக் கோத ஆரம்பித்தபடி பேச்சுக்கொடுத்தாள்…
ஆமா பவி… ரவி எத்தனை மணிக்கு வருவார்…
அ….என்றவள் முடிப்பதற்கு வார்த்தை வராமல் தடுமாற…
என்னங்க உங்களுக்கே தெரியாதா…. ஏளனமாக கேட்டாள் சுலக்சனா
ம்.. அ…அஞ்சு மணிக்கு வருவார்..
ஓ…எத்தனை வருச பழக்கம் உங்களுக்கும் ரவிக்கும்…
ஏழு வருசம்… அடக்கமான பதில் பவியிடமிருந்து….
உங்களுக்கு எத்தனை வயசிருக்கும் ஒரு 25…. ம்…. ?
இப்போதான் 24…. என்று மென்றுவிழுங்கி பதில் கூறினாள் பவி…
இதைக்கேட்ட சுலக்சனா…ஆஹா…ரொம்பச்சின்னப்பொண்ணு…என்று
திடீரென திரும்பி அமர்ந்திருந்த அவள் கன்னங்களைக் குனிந்து கிள்ளிவிட்டாள்….
மலைத்துப்போன பார்வையுடன் பவி…
என்ன…… என்று ஆச்சரியத்துடன் பவித்ராவின் முகத்தைப் பார்த்த சுலக்சனா…தலையைக் குனிந்து தன்னையும் பார்த்தாள்…
ஓ..ஓ… மேலாடையணியவில்லை…..அதைத்தான் பவி ஆச்சரியமாக பார்க்கின்றாள் என்று உணர்ந்து கொண்டவள் நிமிர்ந்து கொண்டாள்..
அவள் கொண்டுவந்திருந்த அந்த சிறிய ட்ரவலிங் பைக்குள் இருந்து ஒரு புதிய உள் மேலாடையை எடுத்து லேபிளைக் கிழித்துக்கொண்டே…இவள் பக்கம் திரும்பிக்கொண்டவள்…
இப்பயெல்லாம் கடைக்காரனுங்க ரொம்ப ஏமாத்துறாங்க பவி…
ஓ… என்று அரையும் குறையுமாய் பவியிடமிருந்து பதில்…
என்ன நீங்க கடைக்கு போறதே இல்லையா…எல்லாம் ரவி தானா…
அவள் சீண்டல் இவளுக்குள் எரிமலையை உருவாக்கியது…ஆனாலும் விருந்தாளி என்று அடக்கிக்கொண்டவள்…
நிதானமாக… சாப்பிடலாமா என்றாள்…
ம்…நானே கேட்கனும் என்றிருந்தேன்.. யு ஆர் ஏ நைஸ் வுமன் …என்று உரிமையுடன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டவள்… போலாமே என்றாள்….
இறுக்கமாகப்பற்றிக்கெண்ட அவள் பிடிகளிலிருந்து விடுபட இவளால்
முடியவில்லை… பல்லைக்கடித்தவாறு சாப்பாட்டு மேசை வரை
வந்தாள்…ம்… உட்காருங்க சுலக்சனா என்றாள்…
வாவ் வாவ்…. ஸ்வீட் வொய்ஸ் யா…
இன்னைக்கு நீங்க இருங்க நான் பரிமாறப்போறன் என்றவள் கட்டாயப்படுத்தி பவித்ராவை அமர வைத்தாள்…மேசையில் மூடிவைக்கப்பட்டிருந்த சாப்பாடுகளை உரிமையோடு எடுத்து பரிமாறினாள்…
பவித்ராவின் மனதுக்குள் பீதி கலந்த எண்ணங்கள் அசைய ஆரம்பித்தன….
சாப்பிடுங்க பவி…
ம்.. என்று சுதாரித்துக்கொண்ட பவித்ரா சாப்பிட ஆரம்பித்தாள்….
அவள் பின்னால் வந்து நின்று கொண்ட சுலக்சனா…அவள் இரு
தோள்களிலும் தன் விரல்களை மெதுவாக அழுத்தி அவள்
தோள்களை மென்மையாக மசாஜ் செய்துவிட்டாள்….ஒரு வகை கூச்சத்தால் நெளிந்த பவித்ரா….
சுலக்சனா நீங்களும் சாப்பிடுங்க என்று தன் தொனியை உயர்த்தினாள்…
புரிந்துகொண்டவள் திடீரென பவியின் கழுத்தை வளைத்து தன் கைககைளப்போட்டு அவள் முகத்தோடு முகத்தை வைத்து..ஓகேடி
செல்லம் என்று சிறிய ரக முத்தமொன்று….
வெட்கம் பவியைத்துளைத்தது…அவள் எச்சிலைத் துடைக்கத் துடித்தாள்… ஒரு கையில் சாப்பாடு மறு கையால்…ம்…சரி என்று பொறுத்துக்கொண்டாள்….
தனக்கும் பரிமாறிக்கொண்ட சுலக்சனா வித்தியாசமாக இரு விரல்களால் அள்ளியெடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்…பவியின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் துளைத்தெடுத்துக்கொண்டிருக்க…
ஏன் பவி… ரவி எங்கே வேலை செய்றார் தெரியுமா
அவள் கேள்வியும் இடக்கு முடக்காக இருக்குமோ என்று பயந்தாலும்
… ம்… அதில என்ன சந்தேகம் என்றாள்
ம்… அவர் அங்க என்னவா வேலை செய்றார்… கேள்விகள் தொடர்ந்தது..
ஓ…ரவி நண்பன்னு சொன்னிங்க… இது தெரியாதா என்று மறு கேள்வி கேட்டாள் பவி
எனக்குத்தெரியும் உங்களுக்குத் தெரியுமா என்று பார்த்தேன் என்றாள்…ஒரு கண்ணை சிமிட்டியபடியே சுலக்சனா..
ம்…என்று தலையாட்டி மெளனமானாள் பவித்ரா…
மீண்டும் பேச்சுக்கொடுத்தாள் சுலக்சனா
அவர் செல் நம்பர் தெரியுமா…
இப்போது பொறுமையிழந்தாள் பவித்ரா…
லுக் சுலக்சனா… நீங்க யாரு கிட்ட பேசிக்கிட்டிருங்க தெரியுதா…ஐ அம் ரவிஸ் வைப் என்று உரக்கக் கூறினாள் பவி..
கூல்டவுன் பவி… ஏன் டென்சனாகுறிங்க என்று பவித்ராவை ஆசுவாசப்படுத்தியவள்…வேறு எதுவும் பேசவில்லை…
சாப்பாடு முடிந்தது… மெளனம் தொடர்ந்தது…
பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு முன் அறைக்கு வந்தாள் பவித்ரா…
அங்கே சுலக்சனாவும் ஒரு சோபாவில் அமர்ந்திருந்தாள்…
மூவர் அமரும் பெரிய சோபாவில் அமர்ந்துகொண்டாள் பவித்ரா…
மறுகணம்…துள்ளி வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டாள் சுலக்சனா…
பவித்ரா….
ம்..
ஒரு ஹெல்ப்…
என்ன…. வெறுப்புடன் கேட்டாள் பவி
கண்ணைக்கசக்கியபடி அவள் அருகே தன் முகத்தைக்கொண்டு வந்த சுலக்சனா … இங்க பாருங்க இந்தக் கண்ணுல ஏதோ தூசு விழுந்துட்டுது…. ப்ளீஸ் ஊதிவிடுங்க என்று மிகவும் நெருங்கி வந்தாள்…
முடியாது என்று சொல்ல முடியாத நிலை… அவள் வலது கண்ணை
தன் விரல்களால் விரித்தவள்….தன் மெல்லிய உதடுகளை அருகில்
கொண்டு சென்று ஊத முனைந்தாள்…அப்போது மெதுவாக விலகிக்கொண்ட சுலக்சனா…
தன் கண்ணைத்துடைத்து விட்டு…. மீண்டும் ப்ளீஸ் என்றாள்…
இரண்டாவது தடவை…. மீண்டும் இவள் அருகில் சென்று ஊத முனைய…தன் மூக்கின் வலப்புறம் மெதுமையாகத்தெரியும் அவள் கன்னங்களை நோட்டமிட்டன சுலக்சனாவி கண்கள்… மெதுவாகத் தன் முகத்தை அவள் முகத்தோடு உரசிக்கொண்டாள்…இனம் புரியாத இளஞ்சூட்டுடன் மூச்சுக்காற்று வெளியாகியது…. சூ
இதை ஏற்றுக்கொள்ள முடியாத பவி சட்டென விலகினாள்….
எதுவுமே சொல்லாமல்… தாங்ஸ் பவி என்றாள்….சுலக்சனா
பதிலுக்கு ஒரு அசட்டுப் புன்முறுவல் பவியிடமிருந்து….
ஒரு நிமிட மெளனம்..
பவி…ரவின்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா….
என்ன கேள்வி கேட்கிறாள் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டவள் துணிவுடன்… பிடிக்காமலா சேர்ந்து வாழுறன் என்றாள்…
ம்… சேர்ந்துன்னா… கல்யாணம் ஆச்சா
இல்லை என்று மெதுவாக பதிலளித்தாள் பவி..
அப்புறம்… என்ன சேர்ந்து வாழ்றது..
இந்தக்கேள்வி காரசாரமானது ..இருந்தாலும் திடகாத்திரமாக….
எது…ஊரைக்கூட்டி தாலி கட்டிக்கிட்டா அது மட்டும்தான் கல்யாணமா…ஏன் … தாலி கட்டாமலே கணவன் மனைவியா வாழமுடியாதா…
ம்…ம்… ரொம்ப அட்ரக்டிவ்… ஆனா பாருங்க பவி..தாலி கட்டாம
கணவன் மனைவியா நீங்க வாழலாம்… உங்க பிள்ளைக்கு யார் தகப்பன்… என்று அவள் முடிக்க முன்…
சுலக்சனா…நானும் ரவியும் காதலிச்சு விரும்பி வாழ்றம்… இது பலவந்தமான வாழ்க்கையில்லை… விரும்பி வாழுறது…எங்கள் எதிர்காலம் என்னவென்று எங்களுக்குத்தெரியும் என்று சற்று உரக்கவே கூறினாள்….
இப்போது ஒரு வகை அமைதி சுலக்சனாவின் கண்களில் தெரிந்தது…
அந்த அமைதியுடனேயே பவித்ராவின் கையைப்பற்றி தன் கண்களில் வைத்துக்கொண்டாள்…
பவித்ராவுக்கு ஒன்றுமே புரியவில்லை….. ஆனால் அவள் கைவிரல் இடுக்கில் ஒரு சிறு துளி ஈரம் கசிந்ததை உணர்ந்து தன் கையை எடுத்துவிட்டு சுலக்சனாவின் முகத்தைப்பார்த்தாள்…
ஆனால் அவளைப் பார்க்கவிடாத சுலக்சனா எழுந்து கொண்டாள்…மெதுவாக நடந்து அந்த ஜன்னல் ஓரத்தில் சென்று நின்றாள்…
இவளைப்புரிந்து கொள்ள முடியாத பவித்ரா…எழுந்து அவள் அருகில் சென்றாள்….
பவித்ரா தன் அருகில் இருப்பதை உணர்ந்து கொண்ட சுலக்சனா…தன்னை சுதாரித்துக்கொண்டு…
அப்புறம் பவி…என்ன படிச்சிருக்கிங்க என்றாள்….
அதவிடுங்க…நீங்க ஏன் கண் கலங்குறிங்க என்றாள் பவி..
ம்… நோ… பவி சொல்லுங்க என்ன படிச்சிருக்கிங்க…
பிசினஸ் மெனேஜ்மன்ட்…..
தட்ஸ் குட்… பவி நீங்க ஏன் வேலைக்கு போகல…
ம்..அப்படியொரு தேவையில்ல … போகல என்றாள் பவித்ரா…
ம்… வீட்ல எத்தனை பேர்…
நான்…அக்கா…அம்மா…அப்பா… ம்… தம்பி யுஎஸ்ல …
ஒ.. குடும்ப பொறுப்பு எதுவும் இல்லை…. என்றாள் சுலக்சனா
ம்… என்று அரைகுறையாய் தலையாட்டிய பவியை முந்தியவள்…
இப்போ வீட்டோட தொடர்பு….இல்லையா
ஒரு பெருமூச்சுடன்…இல்லை… ரவியோடு வந்த நாள் முதல் இல்லையென்றாள்….
சுலக்சனாவின் முகத்தில் ஏதோ ஒரு வகை பிரம்மை உருவாகிக்கொண்டிருந்ததை பவி அவதானித்தாள்…
ம்…கேட்கிறன் என்று தப்பா நினைக்காதிங்க… நீங்க ரவிக்கு எப்படி
பழக்கம் என்று ஆரம்பித்தாள் பவி….
நேரம் 5.15 நிமிடம் ஆகியிருக்கும் நிலையில் … அவள் கேள்வியுடன்
சேர்ந்தே வீட்டு அழைப்பு மணி……
கதவைத்திறந்தாள் பவி…அருகில் சுலக்சனா…
உள்ளே நுழைந்த ரவி … எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கையில் இருந்த லெப் டொப்பை சோபாவில் வைத்தவாறே…
யார் பவி… ப்ரென்டா…
இதை எதிர்பார்க்காத பவி குழம்பிப்போனாள்…
மறு கணம் தன் கையை நீட்டி ஹாய் ஐ எம் சுலக்சனா…என்று தன்னை
அறிமுகப்படுத்தினாள் சுலக்சனா…
பவியின் மனம் துடித்தது…. ரவியின் ப்ரென்ட் என்றாளே….யார்
இவள்…எங்கோ தப்பு நடக்குது… கேட்கத் துடித்தாள் அருகில் சென்றாள்…. ரவியின் கையைப்பிடித்திருந்த சுலக்சனாவின் கைகள் வேர்த்திருந்தது… அந்த உணர்விலிருந்து அவனும் விடுபடவில்லை…
ரவியை உசார்படுத்த முனைந்தாள் பவி…அதற்குள்…
அப்புறம்… பவி உங்களைப்பற்றி எனக்கு சொல்லவே இல்லையே… ரவியின் அப்பாவித்தனமான கதையில் செய்வதறியாது திகைத்தாள் பவித்ரா…
ரவி…வந்து… என்று அவள் ஆரம்பிக்கும் போது….
சாப்பாடெல்லாம் ஆச்சா பவி என்று ரவியின் மறு கேள்வி…
ஆமா ரவி…என்று மீண்டும் அவள் எத்தனித்தபோது…
இன்னைக்கு லன்ச் எடுக்கல…பசிக்குது பவி என்றான் ரவி…
உடனடியாக திரும்பி சமையலறைக்கு சென்றாள் பவித்ரா…
அருகில் வந்தாள் சுலக்சனா…
ரவி… இன்னைக்கு நான் இங்கயே தங்கலாமா…கிறங்கும் குரலில் சுலக்சனாவின் கேள்வி…
தாராளமா தங்கலாமே…என்றான் ரவி…
தாங்ஸ் என்றாள் சுலக்சனா…
யூ ஆர் வெல்கம்…
சாப்பாடு தயாராக இருந்தது… கோரப்பசி…முழுக்கவனமும் உணவோடு ஐக்கியமாகிய நிலையில்…ரவி…
திகைக்கும் பார்வையில்….பவித்ரா.. ஏளனச் சிரிப்போடு சுலக்சனா…
அமைதியைக் குலைத்தவளாய்…
ரவி … நான் பரிமாறட்டுமா…என்றாள் சுலக்சனா
சிரித்துக்கொண்ட ரவி… பரவாலயே..நல்ல ப்ரென்ட்தான் பவி.. நீ சொல்லவே இல்லையே என்றான்..பவித்ராவின் பக்கம் திரும்பி…
பதில் சொல்ல பவி வாய் திறக்க முன்… இடையறுத்தாள் சுலக்சனா… ஆமாங்க….என்று அவள் பேச முனைய …
ஆத்திரத்தில் கத்தினாள் பவித்ரா…. ஸடொப் இட்!!!
வீடு ஒரு கணம் அமைதியானது…
என்ன நடக்குது இங்கே…. உள்ளே வரும் போது உங்க ப்ரென்ட் என்றாள்…இப்போ என்னடான்னா உங்களுக்கே தெரியாது என்றிங்க…
ஏய்…யார் நீ…. பவித்ரா கோபம் கொந்தளிக்கக் கத்தினாள்…
விழித்த கண்ணை மூட முடியாத ஆச்சரியத்தில்… ரவி திகைக்க…
அமைதியாக பதில் தந்தாள் சுலக்சனா….
யெஸ்… நான் ரவிக்கு ப்ரென்ட் என்று பொய்தான் கூறினேன்….
ஆனா… நான் யார் என்றத…
ஏய்..ஏய்..நீ யாரா இருந்தா எனக்கென்ன…கெட் அவுட்…
உன் நடத்தையே உன்னைப்பற்றி சொன்னது… ஏதோ ரவி ப்ரென்ட் என்று சொன்னதால் விட்டு வைத்தேன்… போ போடி வெளியே…
ஆத்திரப்படும் பவித்ரா….அமைதியாயிருக்கும் சுலக்சனா..திகைப்பில் இருந்த ரவி…
ஏதோ ஒரு யோசனையில்..தன் கைகளைக் கழுவிய வாறே…எழுந்து சென்று
வீட்டின் கதவினை மூடிவி்ட்டான்…ரவி.
சுலக்சனாவின் அருகில் வந்தவன்…..
சொல்லுங்க மிஸ் … ம் .. சு..ல..க்சனா என்ன விசயம்…எதுக்காக பொய் சொல்லி இங்க வந்திங்க…
சுலக்சனா பதில் சொல்லவில்லை…
மெதுவாக நகர்ந்து ரவியின் அருகில் வந்தாள் பவித்ரா….
சொல்லுங்க… எங்க வீட்டுக்குள்ள ஏன் வந்திங்க கமான் மேடம் என்று உரத்துக் கேட்டான் ரவி…
ஓகே….
ஓகே… சொல்றன்… ஆனா இப்பயில்லை…. போங்க நீங்களும் போய் ட்ரஸ் மாத்திட்டு வாங்க…பவித்ரா…மன்னிச்சுக்கங்க பொய் சொன்னதுக்கு….ஆனா சொல்றன்…நான் யார் என்று சொல்றன்…போங்க போய் ரிலாக்சா வாங்க…நான் இங்கயே இருக்கன்….
உறுதியான ஆனால் மெதுவான தொனியில் கூறினாள் சுலக்சனா..
அவள் கூறியதிலும் ஏதோ இருப்பதாக உணர்ந்தார்கள் ரவியும்… பவித்ராவும்… தங்கள் அறைக்குள் சென்றார்கள்…
சுலக்சனா சோபாவில் அமர்ந்தாள்…
அறைக்குள் சென்ற இருவரும் திரும்பி வர ஒரு மணி
நேரமாகிவிட்டது… சுலக்சனா அமர்ந்த இடத்திலேயே இருந்தாள்…
கைகளைக் கோர்த்தபடி இருவரும் அங்கே வந்தனர்…
வாங்க மிஸ்டர் ரவி…..ம்.. மிஸ்டர் அன் மிசஸ் ரவி….
எங்க வீட்டுக்குள்ளேயே எங்களை வரவேற்கிறது இருக்கட்டும்…சொல்லுங்க யார் நீங்க… ரவியின் நியாயமான கேள்வி..
ஓகே… சொல்றன்…அதுக்காகத்தானே வந்தேன்… ம்… எனக்கொரு பத்து நிமிசம் தாங்க… சொல்லி முடிஞ்சாப்புறம் எப்படியுமே நான் இங்கே இருக்கப்போவதில்லை… போய் என் ஹான்ட் பேக் எடுத்து வாறன்… என்று எழுந்து சென்றவளை இடை மறித்தாள் பவித்ரா…
இங்க பாருங்க… நீங்க யாருன்னே எங்களுக்கு தெரியல…ரவியோட
ப்ரென்ட் என்று சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் உள்ள விட்டேன்… முதல்ல சொல்லுங்க…. என்று ஆத்திரத்துடன் கூறினாள்…பவித்ரா.
பொறுங்க பவித்ரா…வாறன்… இவ்வளவு நேரம் பொறுத்திங்க ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிசம்… என்று அறைக்குள் சென்றாள்….
ரவியும் பவித்ராவும் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம்… அமைதியாக இருந்தார்கள்…
சிறிது நேரம் கழித்து…
உள்ளே சென்றவள் மெதுவாக கதவு வழியே எட்டிப்பார்த்து….மிஸ்டர் ரவி… ஆட்சேபனை இல்லைன்னா கொஞ்சம் வாங்களேன்…என்றாள்…
எழுந்தான் ரவி…
கையைப்பிடித்து இழுத்தவளாக பவித்ரா…எதுக்கு .. எதுக்கு ரவி.. நீ முதல்ல வெளிய வா… வந்து சொல்றதுனா சொல்லு…இல்ல…இப்பவே கிளம்பிடு என்று கத்தினாள்…
அட்டகாசமான ஒரு சிரிப்புடன் … என்ன பவித்ரா அவசரப்படுறிங்க….
அவர் ஆண்பிள்ளை தானே… அனுப்புங்க என்று கிண்டினாள்…
பவித்ராவின் கையை உதறிய ரவி… இரு வாறன் என்று அந்த அறைக்குள் சென்றான்….
படார்…… கதவு சாத்தப்பட்டது……
வெளியே பவித்ரா திகைத்துப்போனாள்….. ஓடிச்சென்றாள் கதவருகே… கதவைத் தட்டினாள்…. எந்த பதிலும் இல்லை…. ஆனால் இருவரும் கதைக்கும் சப்தம் கேட்டது… சுவரோரம் காதுகளைச் சேர்த்து… உரசி…எத்தனையோ வழியில் உள்ளே நடக்கும் உரையாடலைக் கேட்க முனைந்தாள்…. வழியில்லை…வழியே இல்லை எதுவும் வெளியே கேட்கவில்லை….
நிமிடங்கள் கரைந்தன ..மணித்தியாலங்களாகின…கதவு திறக்கப்படவில்லை…
பவித்ராவின் மனதில் சந்தேகம் பிறந்தது…வீட்டின் வெளியே ஓடிச்சென்றாள்…. ஜன்னல் பக்கமாக எட்டிப்பார்க்க முனைந்தாள்..ஐயோ பாவம் … அவளே மூடிய ஜன்னல்கள்.. வழி மறுத்தது…. ஏக்கத்தில் பதறிப்போனாள்…
மனதில் பட்ட கடவுள்களையெல்லாம் வழிபட்டுக்கொண்டாள்….ரவி ரவி என்று
புலம்பத் தொடங்கின அவள் உதடுகள்….கடவுளே என்னதான் நடக்குது என்று ஏங்கியவளாய் அந்த வாசல் படியில் அமர்ந்துகொண்டாள்….தலையில் கை வைத்தவளாய்….இதை விட எதையும் அவளால் செய்ய முடியாது…
நேரம் 8 மணியானது…
அறைக்கதவு மெதுவாக திறந்தது….
தலையைக் குனிந்த படி ரவி… அவசர அவசரமாக அவனை நோக்கி
ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்…பவித்ரா….
என்னங்க…என்ன..என்ன யார் அவள்…..
ரவி மெளனமானான்…
என்னங்க…சொல்லுங்க… யார் அவள்… ரவியின் சட்டையை இறுக்கமாகப்பிடித்துக்கொண்டு கதறினாள்…பவித்ரா….
தொடரும் ரவியின் மெளனம்…அவளை மேலும் ஆத்திரமூட்டியது…
அவசர அவசரமாக அவனை விலக்கியபடி அறைக்குள் ஓடிச்சென்றாள்….அங்கே…அங்கே….அரை நிர்வாணமாக இரத்தம் வழியும் உடம்பில்…சுலக்சனா….
வீர் என்று அலறினாள் பவித்ரா….
என்னங்க….. ஐயோ…. கொ…லை என்று கதறினாள்….என்னங்க….என்னங்க…. பதட்டம் அதிகரித்தது….
பவித்ரா வெறி பிடித்தவளானாள்…. வேகமாக திரும்பி வந்து ரவியின் சட்டையைப்பிடித்தாள்…. ரவி…. நீங்களா… நீங்களா கொலை பண்ணிங்க…ஏன் … ஏன் ரவி….
கற்சிலையாக நின்றான் ரவி….
பவித்ரா சுதாரித்துக்கொண்டாள்…. வேகமாக ஓடினாள்….
தட்டுத்தடுமாறி…தொலைபேசியை எடுத்தாள்…. எண்களை சுழற்ற ஆயத்தமானாள்…..
பவி!!!!
ரவியின் படு பயங்கரமான சப்தத்தில் வீடே அதிர்ந்தது….
பவித்ரா நடு நடுங்கிப்போனாள் … இப்படியொரு ரவியை அவள் பார்த்ததே இல்லை…. நிறுத்து….. அவன் அதிகாரக் குரல்..
ஆனால் பவித்ராவின் முகத்தில் ஒரு வகை வெறி…தாண்டவமாடியது…நோ!!!
அவளும் பதிலுக்குக் கத்தினாள்…
கிட்ட வராதே… நீ யொரு கொலைகாரன்….. நோ…..
மீண்டும் தொலைபேசி எண்களை சுழற்ற எத்தனித்தாள்…..
இதை அவதானித்த ரவி… வேகமாக ஓடி வந்தான் … வேகம் அது அசுர வேகம் … வந்த வேகத்தில் ரிசீவரைப் பிடுங்கி… அதன் வயரை… சுற்றினான்….இறுக்கிச் சுற்றினான்..ஆம் அவள் கழுத்தில் சுற்றினான்… கண்களை மூடி இறுக்கினான்….. குரல் வளை நசுங்கும் வேதனையில் துடிப்புடன் அவள் நாக்கு வெளியேறத் துடிக்கிறது…திறந்த வாய்க்குள்…ஒரு சிறு துளி இடம் கிடைத்தால் புகுந்து கொள்ள காற்றும் திணறுகிறது…
ஓ…. அந்தோ பரிதாபம்….
பரிதாபமாக சாய்ந்து விழுந்தாள் பவித்ரா…..
விழும் அவளை தாங்கிக்கொள்கின்றான்…ரவி…
பவி….. பவி….. ப…..வி…. தேம்பித்தேம்பி அழுகிறான்…
ஐயோ பவி…. அவன் குமுறல் எதிரொலித்து அதிர்கிறது….
என் கையாலேயே உன்னையும் கொல்ல வைச்சுட்டியே…..பவி…
ஆறாய் வடியும் கண்ணீர்….அழுகையுடன் சாய்ந்த அவன் மனது பேசுகிறது…
ஆம்…நான் கொலைகாரன்தான்..கொடியவன் தான் ..கெட்டவன் தான்… ஆனா..ஆனா..அதெல்லாம் உன்னைப்பார்க்க முன்னர் பவி…உன்னைப்பார்க்க முன்னர்…
சந்ரா…வேணுகா…புவனா…யசோ…ஆமா ஆமா இவங்களுக்கெல்லாம் நான் தான் ப்ளே பாய்…ஆனா ஆனா … அது கூட உன்னைப் பார்க்க முன் பவி…உன்னைப் பார்க்க முன்… இவங்க வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு நான் தான் காரணம்… ஆனா..அதெல்லாம் உன்னைப் பார்க்க பேச முன்னர் பவி…என்னைக்கு உன்னைப்பார்த்தேனோ…அன்று முதல் நான் திருந்தி வாழ்ந்தேன்…இப்பவும் திருந்தித்தான் வாழுகிறேன்…பவி…என்னை நம்பு பவி… சத்தியமா இந்த சுலக்சனா தங்கச்சி மது… அவள நான் கொலை பண்ணல… நான் பண்ணல அவளா தற்கொலை பண்ணிட்டாள்…
இப்போ…இப்போ… அதுக்குப் பழிவாங்க இவள் .. இவள் வந்திருக்காள்…
பவி…இவளைக்கூட இவளைக்கூட நான் கொன்றிருக்க மாட்டேன்…விட்டா அவள் என்னைக் கொன்றிருப்பாள்…..பவி… பவி…. கண்ணைத்திற பவி…. கண்ணைத்திற… இப்போ உன்னையும் கொன்றுவிட்டேனா…. பவி…….
நிலத்தில் தலையை அடித்து அழுது புலம்பி அலறியவன் குளிர்ந்து போன பவித்ராவின் உடலை இறுக்க அணைத்துக்கொண்டான்….
அந்த வெற்றுடல் அவனிடம் என்ன ரகசியம் பேசியதோ தெரியவில்லை….
திடீரென்று எழுந்தவன்….ஓடோடிச்சென்று தன் கட்டிலுக்கு அடியில்… அந்தப் பழைய பெட்டியைத் திறந்தான்… எதையோ துலாவும் அவன் கைகள் படபடத்தன…அங்கும் இங்கும் அலைந்து தேடின….
மறு நொடி …டுமீல்……………டுமீல்…..டுமீல்..
கை தவறிய அந்தக் குண்டுகள் கூரைக்கு வெளியே வானத்தை நோக்கிப்பறந்தன…
உணர்வுடன் பாய்ந்த குண்டோ அவன் உயிரைக்குடித்துவிட்டது..
இவன் முடிவுகளும் மாற்றங்களும்…நிலைபெறவில்லை…
இவன் உலகில் எதுவுமே நிரந்தரமில்லை..
இவன் முகமே அறியாமல் உள்ளத்துக்காய் வாழ்ந்த அவள் விதியும்…
இன்று நிர்க்கதியாகி இறந்து போய்விட்டது!
தொடரும்…