பலன் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்..
• சுக்கு, பால், மிளகு, திப்பிலி சமஅளவு எடுத்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்புகுணமாகும்.
• உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பலித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
• கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடற்சோர்வு நீங்கி பலப்பெறும்
• தேங்காய் பால் அடிக்கடி குடித்து வந்தால் ஆண்மை பெருகும். தாது விருத்தியாகும்.
• குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு
• எலுமிச்சைபழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.
• தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.
• தினமும் 5 அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
• முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
• முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
• வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
• வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.