Home » நகைச்சுவை » கணிப்பொறி ஜோக்ஸ்

கணிப்பொறி ஜோக்ஸ்

 

இந்த உரையாடல் முழுக்க கற்பனையே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சிரித்து விட்டு (ஒருவேளை வந்தால்!!) மறந்து விடுங்கள். ரொம்ப முக்கியமாக லாஜிக் பார்க்காதீர்கள். மின்மடலில் வந்த வேடிக்கையான உரையாடல்களை சற்று உல்டா செய்திருக்கிறோம்.

வாடிக்கையாளர் ஒருவர் கணிப்பொறி இயக்க சேவை மையத்தை தன் மொபைல் போனில் அழைக்கிறார். எதிர்முனையில் தேன் குரல் ஒன்று வழிகிறது.

“வணக்கம், நான் திவ்யா பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்?”

“கு..குட் மார்னிங்க் மேடம்.. ந..ந.ல்லாருக்கீங்களா?”

“நான் நலம். சொல்லுங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. மேடம். என் கம்ப்யூட்டருக்குத் தான்..”

“ஊப்ப்ஸ்.. புரிகிறது. சொல்லுங்கள்.”

“கம்ப்யூட்டர் வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது மேடம். வேலை செய்ய மாட்டேங்குது. நெறய பிரச்சினை இருக்கு. மொத்தமா சொல்லட்டுமா.. ஒவ்வொண்ணா சொல்லட்டுமா”

“ஒவ்வொண்ணா சொல்லுங்க”

மானிட்டர்ல ‘கீபோர்டைக் காணோம்னு’ செய்தி வருது. நான் என்ன பண்ணட்டும்? ‘F1’ கீ கூட அமுக்கிப் பார்த்துட்டேன். ஹெல்ப் வரமாட்டேங்குது..”

சிலையானது கால் செண்டர் தேவதை.

“கம்ப்யூட்டருக்குப் பின்னாடி, கீபோர்டுலர்ந்து போற கேபிள் ஒன்னு சொருகியிருக்கும். அதப் பிடுங்கி மறுபடியும் மாட்டுங்க”

“ஆங்…இப்போ சரியா வேலை செய்யுது. ஆனா இப்போ வேற ஒரு ப்ராப்ளம். Press any key அப்படின்னு சொல்லுது”

“சரிகீ அமுக்குங்க..”

“ஐயோ… என் கீபோர்டுல any key இல்லை.. நான் என்ன செய்யறது?”

“ஐயோ..ராமா.. ஏதாவது ஒரு கீ அமுக்குங்க”

“ஆங்க்.. இதுக்குத் தான் எக்ஸ்பர்ட்ஸ் வேணுங்கிறது.. இப்போ பூட் ஆகுது”

“விண்டோஸ்க்குள்ளே போனதுக்கப்புறம் பிரிண்ட் குடுக்கும்போது பிரிண்டரைக் காணோம்னு செய்தி வருதே மேடம்”

‘சரியான மாங்கா மடையனா இருப்பானோ..’ மனதில் நினைத்தவாறே, “சரி.. பிரிண்டரைத் தூக்கி கம்ப்யூட்டரை நோக்கித் திருப்புங்க..”

“ஆங்.. இப்படிப் பண்ணா கம்ப்யூட்டர் பிரிண்டரைக் கண்டுபிடிச்சிடுமா?”

“கண்டிப்பா..கண்டுபிடிக்கும்”

“என்னை ஏமாத்தாதீங்க மேடம்.. அது எப்படிக் கண்டுபிடிக்கும்?”

“இப்போ விண்டோஸ்ல புது ஆப்சன் வந்திருக்கு. ‘பிளக் அண்ட் பிளே’ மாதிரி ‘லுக் அண்ட் இன்ஸ்டால்’.

“ஓ.. டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச்..யா “ வியந்தவாறே பிரிண்டரோடு மல்லுக் கட்டினார் வாடிக்கை.

சிரிப்பலைகள் பரவின கால் செண்டரில்.

வாடிக்கை பிரிண்டரை நகர்த்தியதில் கேபிள் லூஸ் அதுவாக சரி செய்யப்பட்டு பிரிண்டரை இன்ஸ்டால் செய்தது விண்டோஸ்.

“வாவ்.. இட்ஸ் ரியல்லி கிரேட் மேடம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. இப்போ இன்னோரு பிராப்ளம்..”

மனதிற்குள் “பகவானே.. சீக்கிரம் என்னைக் காப்பாத்து”.

“ம்ம்..சொல்லுங்க”

“என்னோட கம்ப்யூட்டர்ல இருக்கற டீ கப் ஹோல்டர் உடைஞ்சி போச்சி. வாரண்டி பீரியட்ல இருக்கறதால மாத்தி தருவீங்களா?”

“கம்ப்யூட்டர்ல டீ கப் ஹோல்டரா?! வாட் டூ யூ மீன்? கம்ப்யூட்டர் வாங்கும்போது எதுவும் இலவசமா கொடுத்தாங்களா?

“இல்லை. அது கம்ப்யூட்டருக்குள்ளேயே அட்டாச் ஆகியிருக்கு”

“புரியலியே.. அதுல எதுவும் எழுதியிருக்கா?”

“ஆமாம். 52x ன்னு எழுதியிருக்கு”

கலகலத்தது கால் செண்டர். “ஓஓஓவ்வ்வ்வ்வ்வ்…”

“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

“ஓ! அப்படியா மேடம். நாங்கூட அதை டூ இன் ஒன்னுன்னு நெனச்சேன். என்னோட ப்ராப்ளம் எல்லாம் தீர்ந்துடுச்சு. ரொம்ப நன்றி மேடம்”

“வெல்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top