Home » படித்ததில் பிடித்தது » சில பொன்மொழிகள்!!!
சில பொன்மொழிகள்!!!

சில பொன்மொழிகள்!!!

நீ செய்யும் காரியம் தவறாகும் போது,
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
—டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி —-

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
—திரு. டெஸ்கார்டஸ்–

இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது.
எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
–பெயர் தெரியா பெரியவர்—

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
–புத்தர்—

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.
உழைக்கும் நேரம்.
–பெயர் தெரியா பெரியவர்—

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
—மாவீரன் நெப்போலியன்—

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.
வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்.
–பெயர் தெரியா பெரியவர்—

நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
—திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்—

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
–பெயர் தெரியா பெரியவர்—

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம்
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு
கொண்டு வந்துவிடும்.
–பெயர் தெரியா பெரியவர்—

போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
–பெயர் தெரியா பெரியவர்—

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் கூட                                                                                                        விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
–ரஸ்கின்—

எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
–பெயர் தெரியா பெரியவர்—

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
—திரு. எட்மன்ட் பார்க்—

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
–திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா—

காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம்.
ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும்
செய்தால்தான் வெற்றி பெற முடியும்.
–பெயர் தெரியா பெரியவர்—

நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்,
நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும்.
–பெயர் தெரியா பெரியவர்—

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
–சுவாமி விவேகாந்தர்–

எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு,
உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர்.
–பெயர் தெரியா பெரியவர்—

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
— அண்ணல் காந்தி —

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
—தத்துவஞானி சாக்ரடீஸ்–

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
–தத்துவஞானி கன்பூசியஸ்—

அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான்.
அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான்.
–பெயர் தெரியா பெரியவர்—

உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும்,
ஒருவருக்கு உணவளி அது போதும்

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
–அன்னை திரசா–

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
–திரு. வோயாஸ்—

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
–கவிஞர் ஹோமர்–

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
–பெயர் தெரியா பெரியவர்—

வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
–கவிஞர் சுகி—

உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது.
உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது.
–பெயர் தெரியா பெரியவர்—

உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய்.
–பெயர் தெரியா பெரியவர்—

ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான்.
சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான்.
–பெயர் தெரியா பெரியவர்—

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.
—பைபிள்—

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
—திரு. ஹென்றி டேவிட் தேரோ—-

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
— தத்துவஞானி கன்பூசியஸ்—

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா?
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
–திரு. டாக்டஸ்–

வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும்.
–பெயர் தெரியா பெரியவர்—

லஞ்சம் வாங்காதே அதற்க்கு பதில் பிச்சை எடு.
—பெயர் தெரியா பெரியவர்—-

அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி.
–பெயர் தெரியா பெரியவர்—

எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல
–பெயர் தெரியா பெரியவர்—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top