பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது. ஈஸ்டர் தினத்தில் (5, ஏப்ரல், 1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும்.10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.
ஈஸ்டர் தீவு 15மைல் நீளமும் 10மைல் அகலமும் கொண்ட ஒரு முக்கோணத்தீவு, பரப்பளவு 163 சதுர கிலோமீட்டர்கள். சிலியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் சுமார் 15000 பேர் வசித்து வந்த இந்தத் தீவில் 1722ஆம் ஆண்டு 2000 முதல் 3000 மக்கள் மட்டுமே வசித்துள்ளனர். ஆனால் 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 5800 பேர் வசிக்கிறார்கள்.
ஈஸ்டர் தீவு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு. இதன் அருகில் உள்ள மனிதன் வாழும் தீவுஆன பிட்கேர்ன் தீவு சுமார் 2,075 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஈஸ்டர் தீவின் அருகில் உள்ள தீபகற்பமான சிலி 3,512 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது.
அருகில் உள்ள உறங்கும் எரிமலையில் சிலைகள் செதுக்கப்பட்டு, கீழே கொண்டு வந்து நிறுவப்பட்டிருக்கின்றன. அப்படி 300-க்கும் மேற்பட்ட சிலைகள் காணப்படுகின்றன. இன்னும் பூர்த்தியடையாத 400 சிலைகள், மலையில் உள்ளன. உளிகளும், சுத்தியல்களும் கூட அத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடி உயரம் உள்ளது. முடிக்கப்படாத ஒரு சிலை 66 அடி உயரமுள்ளதாக உள்ளது. முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரைக்குமான சிலைகள் இவை. உருவங்களின் சாயல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிலைகளின் பின் புறம் குறியீடு அல்லது சித்திர எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன. மலையில் இருந்து 10 மைல் தூரத்தில் கூட சிலைகள் உள்ளன. அவ்வளவு பெரிய சிலைகளை எப்படித் தூக்கிவந்து மேடை மீது நிறுத்தினார்கள் என்பது விளங்கவில்லை.
இங்கு காணப்படும் மனிதச் சிலைகள் அனைத்திலும் காதுகள் நீண்டதாக தெரிகிறது. பாலினேசியர்கள் இடையே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒரு குழுவில் இருந்தவர்களின் காதுகள் நீண்டதாகவும், மற்ற குழுவில் இருந்தவர்களின் காதுகள் சிறியதாகவும் காணப்பட்டன. நீண்ட காதுகளை உடையவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்களே ஆட்சியும் செய்தனர் அவர்கள் மற்றவர்களை அடக்கி அடிமையாக நடத்தினர்.அதிகாரத்தில் உள்ளர்வர்களது உருவங்களை அடிமைகள் சிலைகளாக செதுக்க கட்டளையிட்டனர். இதனால் தான் இங்குள்ள அனைத்துச் சிலைகளும் காதுகள் நீண்டதாக உள்ளது என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ஹவாய் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிகன்ட் என்பவரும், கலிபோர்னிய மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் லிப்போ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர்ஜிகோ ராபு இவர்கள் 12 ஆண்டுகால தொடர் ஆய்வின் இறுதியில் கற்சிலைகள் இப்படித்தான் நிறுவப்பட்டிருக்கும் என்ற முடிவிற்கு வந்ததோடு 18 பேர்களை கொண்டு செயல்படுத்தியும் காட்டினர்.
ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி. என். ஏ மரபியல் நியதி பொலினேசிய நியதியுடன் ஒத்துப்போனது. அந்த நாளில் சாதாரண கட்டுமரங்கள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது. உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சியாக இது அமைந்தது. இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1999இல் மாங்கெரேவா தீவுகளிலிருந்து தொன்மைக்கால பாலினீசிய வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டுமரங்களில் நடத்தப்பட்ட கடற்பயணம் 19 நாட்களில் ஈஸ்டர் தீவினை சென்றடைந்தது.
அத்தீவில் தொல்பொருள், தாவரவி யல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். நிறைய மரங்களும் , உயிரினங்களும் அத்தீவில் இரு ந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்த போ து, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்க ளின் எச்சங் களும், தொன்மங்களும் கிடைத்தன. இவையெல்லாவற்றையும் விட உரு ளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம் மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றி ன் வழி தோன்றலான, சில மரங்களு ம், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரி ய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர்.
ஈஸ்டர் தீவு பழங் குடியினர் டால்பின் மீன்க ளை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப் பகுதியில் மீன் பிடி ப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டுமரம் செய்வதற்கு பய ன்படுத்தினர். டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டு மரங் கள் செய்தனர். அதிகமான கட்டுமரங் கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.
நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக்கலையில் கைதேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவு ம் பிரம்மாண் டமான சிலைகளை செய்தனர். அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லை யோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த் தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரி யாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப் பெரு க்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்ட த்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.
உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இன ங்கள் அழிந்து போயின. அவை அழிந்தபின் தான் தெரிந் தது; அப் பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி , கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப்பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.
உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற் பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதை யடுத்து ஏற்பட்ட பசி, பட்டினி யாலு ம், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர். உருளை மரங்களை பழங்குடியி ன மக்கள் உணவிற்காக பயன்ப டுத்தவி ல்லை. உணவிற்காக பயன் படாத ஒரு மரத்தை வெட்டி யதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. தற்போது அத்தீவில் ஒரு மரம் கூடக் கிடையாது. ஒரே வகையான புல் மட்டுமே உள்ளது.
இப்படியாக இத்தீவில் வசித்தவர்கள் அழிந்தது போக எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர். அவர்கள் மூலமாக சின்னம்மை போன்ற தொற்றுநோய்கள் பரவின. இது போன்ற நோய்களுக்கு எதிர்ப்புர்த் திறன் கொண்டிராத தீவுவாசிகள் இவற்றுக்கு எளிதில் பலியானார்கள். இதனால் 1877ல் இத்தீவில் வசித்தவர்களின் எண்ணிக்கை 111ஆக சுருங்கியிருந்தது.
சர்க்கரைவல்லிக் கிழங்கு இங்கு இருந்திருக்கிறது 2300 மைல் தொலைவில் சிலியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். சர்க்கரைவள்ளிகிழங்கு அன்று தென்னமெரிக்காவில் மட்டும் விளையும் கிழங்கு. ஆக ஈஸ்டர் தீவுகளில் குடியேறி அதன்பின் தென்னெமெரிக்கா சென்று மீண்டும் அங்கிருந்து ஈஸ்டர் தீவுகளில் இவர்கள் குடியேறி இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.