லேட்டஸ்ட்
“ரோஸ்ட்’ வேஸ்ட்!
“ப்ரை’ செய்யப்படும் உணவுகளில் உள்ள சர்க்கரை சத்தின் நுண்துகள்கள், தோலின் உள்ளே இழைகளாக பரவி இருக்கும் இந்த புரோட்டின்களில் கலந்து அதன் தன்மையை மங்கச்செய்துவிடும். இதனால், தோல் பகுதி வறண்டு போகிறது. வயதான தோற்றத்தை தருகிறது. சிரித்தால் கூட, தோல் பகுதி, கண்டபடி சுருங்கி, அசிங்கமாக தோற்றமளிக்கும்.
இப்படி இனிப்பு பண்டங்கள் மட்டுமல்ல, அதிக நேரம் “ரோஸ்ட்’ செய்யப்பட்ட கோழிக்கறி, வாணலியில் கரி ஏறும் அளவுக்கு, முறு கல் என்ற பெயரில் கருக வைக்கும் உருளைக்கிழங்கு “ப்ரை’ பொரியல், பொன்னிறமாகும் அளவுக்கு தயாரிக்கப்படும் சில வகை உணவுகள் போன்ற எல்லாவற்றிலும், இந்த நுண்துகள்கள் இருக்கிறது. இவை தோல் அழகை கெடுத்துவிடும்.
காது அடைப்பா?
காதினுள் மெழுகு போன்ற திரவத்தை, காது சுரப்பி சுரக்கிறது. இந்த மெழுகு தான், காதின் வெளிப்பக்கம் பரவி, அழுக்கு, பாக்டீரியா போன்றவை உள்ளே புகாமல் தடுத்துவிடுகிறது. பொதுவாக குளிக்கும் போது, காதை சுத்தம் செய்யும் போதே, இந்த மெழுகு தானாக நீங்கிவிடும். சிலருக்கு அதிக மெழுகு சேர்ந்து விடக்கூடும். அவர்களுக்கு தான் அடிக்கடி காது அடைப்பு ஏற்படும்.
காது மெழுகை சுத்தப்படுத்துவது என்பது, தினமும் குளித்தவுடன், மிருதுவான டவலால் மெதுவாக காதின் வெளிப்பகுதியில் மட்டும் துடைத்தால் போதும். மெழுகை எடுக்கிறேன் பேர்வழி என்று, காதின் உள்ளே விட்டு, கரடுமுரடாக தேய்ப்பது கூடவே கூடாது.

நல்லது தான்
சூயிங்கம் சாப்பிடுவது கெட்டதா? நல்லதா? எதையும் மிதமிஞ்சி சாப்பிடுவது கெட்டது தான். சூயிங்கம் சாப்பிட்டால், கலோரி குறைந்துவிடும் என்பது உண்மை. சூயிங்கம் சாப்பிட்டால், அது வயிற்றில் தங்கி விடும் என்று சிலர் தவறாக எண்ணுவர். ஆனால், உண்மையில், மற்ற உணவுகளை போல, அதுவும் மலமாக வெளியேறி விடுகிறது.
வெயிலில் காய்ந்தாலும்… அப்பாடா என்னா வெயில்…என்று நீங்கள் அலுத்துக்கொள்ளத்தான் செய்வீர்கள். 40 டிகிரி செல்சியஸ் வெயிலில் ஒரு நன்மை இருக்கிறது தெரியுமா? வேகாத வெயிலில் அலைந்து திரும்பிய ஒருவருக்கு மணிக்கு 15 கலோரி குறைகிறது. அதற்காக, நண்பகல் வெயிலில் அதிக நேரம் அலைந்தால், “சன் ஸ்ட்ரோக்’ வந்து விடும், ஜாக்கிரதை.
காது கிழி கிழி…
மொபைல் போன், ஐபாட் போன்றவற்றில் இருந்து சினிமா பாடல்களை அலற விட்டு “காது மிஷின்’ போல “இயர் போனில்’ கேட்பது இளைய வயதினருக்கு குஷியை தருகிறது; ஆனால், காது “டமால்’ ஆகி விடும், நடுத்தர வயதில். ஒரு மணி நேரம் “ஹெட் போன்’ காதில் பொருத்தியிருந்தால், காதில் பாக்டீரியா சேருவது, 700 மடங்கு அதிமாகிறது. நாற்பதுக்கு மேல் யார் கூப்பிட்டாலும், ஆங்ங்… என்னாது… என்று செவிடாகி விடுவீர்கள். புரியுதா?
நீங்களே டாக்டரா?
ரசாயன கலவைகள் கொண்டு தயாரிக்கப்படும் மாத்திரைகள், இப்போது மருந்துக்கடைகளில் ஏகப்பட்ட பிராண்டுகள் உள்ளன.
* பெனிசிலின்: இந்த ரசாயனம் மூலம், பென்சில்பெனிசிலின், அமாக்சிலின், ஆம்பிசிலின், கிளாக்சாசிலின் போன்ற மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
* சிபாலோஸ்போரின்ஸ்: சிபாலக்சின், சிபாலோதின், சிபாடாக்சில், சிபாடாக்சின் என்ற மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.
* மெக்ரோலிட்ஸ்: இந்த ரசாயனம் மூலம், எரித்ரோமைசின், கிளாரித்ரோமைசின், ராக்சித்ரோமைசின் தயாரிக்கப் படுகின்றன.
* சல்பனாமைட்ஸ்: இதில், சல்பாசிடாமைட்ஸ், சல்பாடாக்சின் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
இந்த மருந்துகளை, டாக்டர்கள், நோயாளிக்கு வந்துள்ள பாக்டீரியா தாக்குதலுக்கு ஏற்ப தருவர்.

“ஸ்மெல்’ தெரியுதா?
உங்களுக்கு “ஸ்மெல்’ பிடிக்கத் தெரியுமா? அப்படி இல்லாவிட்டால் தான், “அனோஸ்மியா’ பிரச்னை இருப்பதாக பொருள். 7 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். சிலர், மூக்கை எப்போது பார்த்தாலும், ஏதோ வெயிலில் காயப்போடுவது போல, மேலே நோக்கியபடி, சர்ர்ர்… என்று இழுப்பர். கேட்டால், “வாசனையே தெரியலியேப்பா…’ என்பர். மூக்கில், அடைப்பு வந்தாலோ, நரம்பு பாதிக்கப் பட்டாலோ தான், நுகர்வு உணர்வு மங்கும். சாப்பிடும் உணவுப் பொருள் வாசனையை வித்தியாசமாக உணருவர்.
கரகர தொண்டை
ஜலதோஷத்துக்கு காரணம், ரினோவைரஸ் கிருமி. ஜலதோஷத்தால் அவதிப்படுபவர், கர்சீப்பில் இந்த வைரஸ் தொற்றும். இரண்டு மணி நேரம் உயிருடன் காற்றில் இருக்கும். அதனால்,ஜலதோஷம் வந்துவிட்டால், கர்சீப்பை பயன்படுத்த வேண்டும். மூக்கை மெதுவாக ஒற்றியெடுக்க வேண்டும். கைகளை அவ்வப்போது அலம்ப வேண்டும். கரகரப்பு தொண்டை, மூக்கு ஒழுகல் இரண்டும் தான், ஜலதோஷத்தின் அறிகுறி. மாத்திரை சாப்பிடுவதுடன், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உப்புத்தண்ணீரில் கொப்பளிக்க வேண்டும்.