நிலவிற்கும் பயம் வந்து ஒளிந்து கொண்டதோ என்னவோ…..
இருட்டோ இருட்டு.. இல்லை ஒரே கும்மிருட்டு எங்கெங்கு காணினும்…
அமாவாசை இரவு…..
அந்த அமானுஷ்ய அமைதியை குலைக்கும் வகையில்
“சரக்” “சரக்” “சரக்” “சரக்”
என்ற சத்தம் எங்கிருந்தோ மெதுவாக ஆரம்பித்தது….
அது சிறிது சிறிதாக அபாயகரமாக கேட்கத்துவங்கியது….
இரண்டு கால்கள்…
இல்லை இல்லை நான்கு கால்கள் ஓடிக்கொண்டிருந்தன…
காலணி அணியாத இரண்டு கால்களை காலணி அணிந்த இரண்டு கால்கள் துரத்திக்கொண்டிருந்தன…
சட்டென வழியில் படுத்திருந்த இரண்டு தவளைகள் ‘பக்’ ‘பக்’ என்று தனது சகவாசிகளுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு ஓடுவோரின் ஒத்தயடிப் பாதையைக் காலி செய்தது….
துரத்தல் இப்போது இன்னும் வேகமெடுத்தது…
முன்னால் ஓடியவன் ஓடி ஓடி ஊரின் எல்லையை அடைந்தான்…
அடுத்து ஒரு காட்டெருமை போன்ற கருமையுடன் ஒரு பெரிய மலை குறுக்கிட்டது…
முன்னால் ஓடியவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலையில் ஏற ஆரம்பித்து விட்டான்…
துரத்துபவனும் எளிதில் விடுவதாக இல்லை.. அவனும் அவன் பின்னாலே மலையேறி மலையைக் கடக்க ஆரம்பித்துவிட்டான்….
மலையைக் கடந்தவுடன் “சொய்” என்ற சத்தத்துடன் ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது….
முன்னால் ஓடியவன் ‘எவ்வளவு தண்ணி’ ‘எவ்வளவு வேகம்’ ‘என்ன ஆபத்து’ என்று எதையுமே பார்க்கவில்லை…
அவன் பாட்டுக்கு ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டான்….
துரத்துபவன் விடுவானா? அவனும் தான்….
முன்னே ஓடியவன் கரையை அடைந்தவுடன் அவனிடம் இருந்த சக்தியெல்லாம் இழந்ததைப் போல உணர்ந்தான்….
அவனால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.. அருகிலேயே ஒரு பாழுங்கிணறு கண்ணில் பட்டது..
சடாரென அதற்குள் குதித்துவிட்டான்…
குதித்தானா இல்லை யாராவது தள்ளினார்களா…? எனத் தெரியவில்லை
பின்னாலேயே வந்தவன் பெருமூச்சுடன் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்….
உள்ளே….
உள்ளே….
தண்ணீர் துளிகூட இல்லை….
முன்னே குதித்தவன் அங்கே சிலையாகிப் போயிருந்தான்…
இவனுக்கு பக்கென்று இருந்தது…
அப்போது தான் கவனித்தான்… தன் காலில் இருந்த ஒற்றைச்செருப்பை…
துரத்திக்கொண்டு வந்ததில் இவனது ஒரு செருப்பு எங்கோயோ விழுந்துவிட்டது போல….
எந்த யோசனையுமின்றி ஒரு குழம்பிய சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்ப எத்தனித்தான்…..
அப்போது……………
தொடரும்…