தன் தலை மேல் விழுந்த பல்லியால் ஒன்றும் ஆகா போவதில்லை என்ற எண்ணத்தாலோ என்னவோ,,, அதை ஒரு பெரிய விஷயமாக மனோகர் எடுத்துகொள்ள வில்லை,,,,
அவர் குளியலை முடித்து,,,, உடை மாற்றி வருவதற்குள் அருணின் காபி தயாராக இருந்தது,,,,
அதை வாங்கி உறிஞ்சினார்,,,, மனம் இயல்பாக இருப்பது போல பாவனை செய்தது,,,,,,,, இருப்பினும் எதோ ஒரு மூலையில் ஒரு சலனம் “அந்த முடியரசனை சென்று பார்”- ஒரு குரல் போல உந்தி கொண்டே இருந்தது
“அருண்,,,, ”
“சார்”
“இந்த படம் வரைஞ்சி அனுப்பிருக்காரே,,,”
“ஆமாம் சார் முடியரசன்”
“ஆங் ,,,, முடியரசன் முடியரசன்,,,, அவர் அட்ரஸ் இருக்கா???”
“இருக்கு சார் ஏன் கேக்குறீங்க”
“இல்ல நாம போய் அவர பாத்துட்டு வருவோம்”
“எதுக்கு சார்??”- சந்தேகத்தோடு கேட்டான் அருண்
“இல்ல என் ரசிகர நான் பாக்கணும் எனக்கு கொடுத்திருக்க பரிசுக்கு நன்றி சொல்லணும் அதான் “- என்று இழுத்தார்
இத்தனை வருடத்தில் அருண் முன் அவர் தயங்கி பேசுவதும்,,, உள் ஒன்று வைத்து வெளியே ஒன்று சொல்வதும் இதுவே முதல் முறை
அருண் ஒரு சந்தேக பார்வை பார்த்தான்,,,,,,,,,
“சார் அந்த காட்ட பத்தின எண்ணத்த விட்டுடுங்க
அதை யோசிச்சு நீங்க ரொம்ப upset ஆகுறீங்க “- மனோகரனுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தான் அருண்
“இல்ல அருண் ஜஸ்ட் விஷ் பண்ண த்தான் வேற எதுக்கும் இல்ல “- தான் பொய் சொல்கிறோம் என்பது மனோகரனுக்கே தெரிந்தது
ஆனால் என்ன செய்ய அவர் மனம் படும் பாடு அவர் மட்டுமே அறிவார் ,,, சிந்தனை செய்து சீர்திருத்தம் படைப்போருக்கு மனம் என்னும் கரையான் அரித்து கொண்டு தானே இருக்கும்
அதிலிருந்த விடுபட முடியாது அதன் போக்கிலே விட்டுவிட வேண்டியது தான்,,,,,,,,,,,,,
ஒரு வழியாக முடியரசனை சந்திக்க அருணை சம்மதிக்க வைத்தார் மனோகர்
“விதி”- என்ற வார்த்தைக்கு அவ்வளவு வல்லமையா?????
இதோ மனோகரனின் விதி அவரை இழுத்து செல்கிறத.
தொடரும்…