சூரியக் குளியல்
கத்தியின்றி இரத்தமின்றி செய்யும் அறுவை சிகிட்சைக்கு பெயரே சூரியக்குளியல். சூரிய ஒளி ஒரு நிமிடத்திற்கு ஒருலட்சத்து எண்பதாயிரம் மைல் வேகத்தில் வருகிறது. அந்த சூரிய வெளிச்சம் நம் உடலில்பட்டால்
நம் உடலைவிட்டு அப்படியே வெளியே செல்வதில்லை. அந்த ஆற்றலை முழுவதும் நம் உடல்கிரகித்துக் கொள்கிறது. அதன்மூலம்
நம் உடலிலுள்ள அழுக்குகளையும் ,கழிவுகளையும், கட்டிகளையும் சூடேற்றி கரைத்துவிடுகிறது.
இதனால் நமது உடலின் உள்ளும் புறமும் உள்ள அத்தனை வியாதிகளும் மறைந்து ஆரோக்கியம் பெருகுகிறது. அதனால் நாம் காலை மாலை சூரியக்குளியல் செய்வது மிகவும் நல்லது.
சூரியன் இல்லையென்றால் இந்த உலகும் உயிரினங்களும் ஒரு நிமிடம்கூட ஜீவித்திருக்க முடியாது. அதனால்தான் சூரியன் நவக்கிரகங்களில் முதல்கிரகமாக விளங்குகிறது.
ஐம்பெரும் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
என்று சூரியனை வணங்கியே இளங்கோவடிகள்
தன் காப்பிய மொழியை எழுத ஆரம்பிக்கிறார்.
இவ்வாறெல்லாம் உலகத்தில் முதன்மையாக இருக்கின்ற சூரியனின் பிரகாசத்தை நாமும் பெற்று பொன்னிறமாய் பிணியின்றி மின்னுவோம்.
சூரியக்குளியல் உடல் வெம்மையை தாங்கும் அளவுக்கு எடுப்பது போதுமானது.
அதிகாலை 6 மணிமுதல் 11 மணிவரையும் மாலை 4 மணிமுதல் 6 மணி வரையும் சூரியக்குளியல் மேற்கொள்ளலாம்.
அந்த நேரத்தில் குறைவான , மெல்லிய வெண்மையான உடையை அணிந்துகொள்ள வேண்டும்.
மனித உடலுக்கும் எலும்புகளுக்கும் உள்ளுறுப்பு
களுக்கும் தேவையான விட்டமின் D சூரிய ஒளியில் மிதமிஞ்சிய அளவில் உள்ளது. சூரிய ஒளியிலிருந்து விட்டமின் D யை கிரகிக்க நமது தோலின் மேல் பகுதியில் மெலனின் என்ற அமிலம் சுரக்கிறது.
இதுவே சூரிய ஒளியை ஈர்க்கும் ஆனால் நாம் இரசாயனம் கலந்த சோப்பு, சேம்பு, களிம்புகளை போட்டு நமது தோலில் இருக்கும் மெலனின் என்ற கிரகிப்பு, மற்றும் பாதுகாப்பு வளையத்தை தினமும் பலமுறை தகர்க்கிறோம்.
இதனாலேயே நாம் தோல் நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்கு ஆளாகிறோம்.
இதைதவிர்க்க நாம் குளிக்க சோப்பு,சேம்பு போன்றவற்றை பயன்படுத்தாமல் மூலிகை குளியல் பொடி, சீயக்காய்தூள் போன்றவற்றை பயன்படுத்துவதோடு முககளிம்பு லோசன் போன்றவற்றை
தவிர்ப்பதே சூரிய ஆற்றலின் மூலம் பல வியாதிகளை குணப்படுத்திக்
கொள்ளவதற்கு உதவும்.
இந்த கொடையில் கதிரவனின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி ஆரோக்கியம் பெற உறுதியேற்போம்.
மக்களே.!
சூரிய ஆற்றலால் மின்சாரம் தயாரிப்பது போலவே நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் முழுமையாக பெறலாம் நமது குரு சூரியசித்தர் “சுவாமி வெங்கட்ரமணன்” சூரிய ஒளியில் யோகம் செய்ததின் மூலமாகவே பல ஆண்டுகள் உணவை தவிர்த்து வாழ்ந்துவந்தார்.
புனேயில் இவரைப்போன்ற ஒரு சுவாமிகளை வைத்து இந்திய மருத்து ஆராய்ச்சிகழகத்தினர் ஆராய்ச்சி செய்து,
சூரிய ஆற்றலை கிரகிக்கத் தெரிந்தால் உண்ணாமல் வாழ்வது சாத்தியம் தான். என்று நிருபித்தனர்..!
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு
போற்றுதும்.!
முன்னோர் ஞானம்
போற்றுதும்
ஞானம் போற்றுதும்.!