தணிகாசலம் சென்றுவிட்டார்,,,,
மனோகரனுக்கு மனமெல்லாம் அந்த காடு வந்து குடிகொண்டது,,,,, உண்மையில் சொல்ல போனால் அவரின் அடுத்த கதை கிடைத்துவிட்டது
அவர் அந்த யோசனையில் இருந்த போது அங்கு வந்தான் அருண்,
மனோகரனின் மாணவன், ரசிகன், அவர் உடனே இருந்து கதை எழுதும்போது எல்லா உதவிகளும் செய்பவன்
“என்ன சார் யோசனைலாம் பலமா இருக்கு?”- கேட்டான்
“என் நண்பன் தணிகாசலம் வந்தான் அவன் ஒரு காடு பத்தியும் அங்க எதோ சாபம் இருக்குறதாவும் சொன்னான்,,, வித்தியாசமாவும் இருக்கு அறிவுக்கு ஒத்துவராததாவும் இருக்கு அத பத்தி தான் யோசிக்கிறேன்”
“சரி அப்போ அடுத்த கதை ரெடி,,, அப்டி தானே??”- எந்த புதிய செய்திபற்றி அவர் யோசித்தாலும் அது கதையாக மாறுவது இயல்பு அதை வைத்தே அருண் இப்படி கேட்டான்
“இல்ல,,,, இந்த மாதிரி அறிவு ஏத்துக்காத காரணத்தை எல்லாம் என் கதைல நான் புகுத்த மாட்டேன்,,, நான் யோசிக்கிறது அந்த மக்களோட அறியாமைய பத்தி தான்”
“என்ன சொல்றீங்க??”
“ஆமா,,, உலகத்துல எந்த ஒரு உயிர் அல்லது பொருள் பிறந்தாலும் இல்ல உருவானாலும் அதற்கு அழிவுங்கிரது நிர்ணைக்க பட்ட ஒன்னு அந்த அழிவு இல்லை புது சக்தி உருவாவதே இல்ல,,, இது இயற்க்கை நியதி,,, இத கூட புரிஞ்சிக்காம ஒரு கன்னி பொண்ணு இருக்கா அவளுக்கு ஒரு சாபம் இருக்கு அவளுக்கு மூப்பு கிடையாது, மரணம் கிடையாது,,, அவளை பாக்கவோ காப்பத்தவோ போறவங்களுக்கு மரணம் இல்லனா மனநல பாதிப்பு ஏற்படும்னு நம்பிக்கிட்டு இருக்காங்களே,,,,, இது முட்டாள் தனம் இல்லையா??”- தன் மன எண்ணத்தை அருண் முன் கொட்டி தீர்த்தார்
“நாம என்ன சொன்னாலும் சமுதாயத்துல எல்லாரும் மாறிட மாட்டாங்க சார்,,, ஒரு சில பேர் அப்டி தான் இருப்பாங்க”
“எதோ ஒருத்தர் இரண்டு பேர் ன்னா பரவால ஒரு ஊரே ன்னா”
அவர் மனம் அதிலே சுற்றி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான் அருண்,,, அதிலிருந்து அவரை மாற்ற,
“சார் சொல்ல மறந்துட்டேன்,,, நேத்து பிரபா புப்ளிஷேர்’s லேந்து கால் பண்ணிருந்தாங்க….,, இந்த மாதாம் 2000 பிரதி அதிகமா உங்க புக் வித்துருக்காம்,,, வாழ்த்தும் நன்றியும் சொன்னாங்க,,, இன்னைக்கு அவங்கள போய் நாம பாக்கணும் ”
அந்த காட்டிலிருந்து மீண்டு தன் சுய வாழ்வை கவனிக்க ஆரம்பித்தார் மனோகர்
மாலை 6 மணி,
புத்தக பதிப்பகத்திற்கு சென்று தன் அலுவல்களை முடித்து வந்தார், தன் அன்றாட பணி முடித்தார்
என்றைக்குமே இல்லாமல் எது ஒரு களைப்பு ஏற்பட்டது,,,, தன் அறைக்கு சென்று படுத்தார்
“கண்ணுக்கு இமை பாரமோ”- அவர் எழுதிய உவமை தான் ஆனால் இப்போது அவர் இமை பாரமாகத்தான் ஆனது மெல்ல இமை மூடினார்
நிகழ்காலம் மறைந்து ஒரு புது யுகம் கண்டார்,,,,,
எவ்வளவு நேரம்?????????? தெரியவில்லை
“சார், சார்”- மனோகரனை எழுப்பினான் அருண்,
ம்ஹும் ,,,, எந்த அசைவும் இல்லை அவரிடம்..,,,எப்போதும் அவர் மேல் கைபட்டதும் எழுபவர் இன்று அசைவற்ற சடலம் போல இருக்கிறார்
அருண் கலக்கமுற்றான் ,,,,
என்ன ஆயிற்று??????????????
தொடரும்…