தண்ணீர் குடியுங்கள்: கோடைக்காலத்தில் தண்ணீரை விட மிகச்சிறந்த தோழன் வேறு எதுவும் இல்லை. உங்களால் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் தண்ணீரை குடியுங்கள் மற்றும் விளையாடுங்கள். கோடைக்காலத்தில் சோர்வாக இருப்பதற்கு காரணம் நமது உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமலிருப்பதே காரணமாகும். ஏனெனில் குறைவான அளவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றுவதால், நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர்கள் தண்ணீராவது நீங்கள் குடிக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாகும். ஆனால், நீங்கள் இந்த அளவைத் தாண்டியும் தண்ணீர் குடிப்பது நலமாகும். வெள்ளரிக்காய்: கோடைகாலத்தில் தாகத்தைத் தீர்க்கும் பணியை தண்ணீர் செவ்வனே செய்து வந்தாலும், மேலும் சில உணவுகளைக் கொண்டு உங்களுடைய உடலின் தண்ணீர் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அது போன்ற உணவுகளில் ஒன்றாக இருப்பது 97 சதவீதம் தண்ணீரைக் கொண்டுள்ள வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயை சாலட் ஆக நறுக்கி சாப்பிடுவதன் மூலம் உடலில் குறைவாக உள்ள தண்ணீரின் அளவை அதிகரிக்க முடியும். வெள்ளரிக்காயை சாலட் மட்டுமல்லாமல் வெள்ளரி சூப், வெள்ளரி ஜுஸ் மற்றும் வெள்ளரி ஸ்மூத்தி போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம். லெட்யூஸ் கீரை (Lettuce) : நார்ச்சத்து மிகவும் நிரம்பியுள்ளதாக கருதப்படும் ஆரோக்கியமான லெட்யூஸ் கீரையை அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும் போது, உடலுக்குத் தேவையான தண்ணீரை கொடுப்பதில் வெள்ளரிக்காயுடன் போட்டி போடும் குணம் கொண்ட கீரை என்பது மற்றுமொரு பரிணாமாகத் தோன்றும். எந்தவித தயக்கம் இல்லாமல் இந்த லெட்யூஸ் கீரையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கான தண்ணீர் தேவை நிறைவேறி புத்துணர்ச்சி அடைவீர்கள். நீங்கள் சாப்பிடும் சாண்ட்விச்களின் அடியில் வைத்து சாப்பிட்டு, இந்த கீரையின் அற்புதத்தையும் நீங்கள் உணர முடியும். முள்ளங்கி : நீர்ச்சத்து நிரம்பிய முள்ளங்கியில் சக்திவாய்ந்த ஆக்சிஜன் எதிர்பொருட்கள் இருப்பதால், உங்களுக்குத் தேவையான தண்ணீரை நீண்ட நேரம் கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது. முள்ளங்கியில் இயற்கையாகவே சாறு நிரம்பியுள்ளதால் அதனை அப்படியே பிழிந்தும் சாப்பிடலாம். மேலும், கீரைகள், கேரட் துண்டுகள், பட்டாணிகளுடன் சேர்ந்து நீங்கள் விரும்பும் வகையில் சமைத்து சாப்பிடலாம். தக்காளிகள்: கோடைக்காலம் அல்லது குளிர்காலம் என எதுவாக இருந்தாலும் உலகெங்கும் உள்ள ஊட்டச்சத்து இயல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவாக இருப்பது தக்காளிகள் தான். இந்த பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் உங்களது உடல் எப்பொழுதும் போதிய அளவு தண்ணீருடனும், வளமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற ஆக்சிஜன் எதிர்பnhருள், தோலில் சுருக்கங்கள் வராமல் தவிர்க்க உதவுகிறது. இதன் காரணமாக உங்களுடைய சருமம் பளிச்சென்றும், கறையில்லாமலும் தோற்றமளிக்கும். தக்காளியைக் கொண்டு எண்ணற்ற உணவு வகைகளைத் தயாரித்து சாப்பிட்டுப் பலன் பெற முடியும். குடைமிளகாய்: கோடைக்காலத்தின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கக்கூடிய குணங்களை குடைமிளகாய் கொண்டுள்ளது. சிவப்பு மற்றும் மஞ்சள் குடை வடிவிலான வகைகளில் நமது உடலுக்குத் தேவையான அளவிற்கு நீர்ச்சத்து உள்ளது. குடைமிளகாயை வைத்து இரவு உணவிற்கு முன்னரும், பின்னிரவு வேளைகளிலும் சாப்பிடுவதற்கான நொறுக்குத்தீனிகளை செய்யலாம். குடைமிளகாயை எந்த வகையான தீனியாகவும் சாப்பிட முடியும். காலிஃப்ளவர்: வெளிர் நிறத்திலிருந்தாலும், கோடைக்காலத்தில் சருமம் வெளுக்காமல் இருக்க உதவும் உணவாக காலிஃப்ளவர் உள்ளது. 93 சதவீதம் தண்ணீர் உள்ள காலிஃப்ளவரில் உடலுக்குத் தேவையான தண்ணீர் உள்ளது என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மேலும் மிக அதிக அளவு ஆக்சிஜன் எதிர்பொருட்களை கொண்டிருக்கவும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் கூடிய சக்திகள் உள்ளன.
தர்பூசணி: கோடைக்காலத்தில் பழங்களைப் பற்றி பேசும் போதே தாகம் தணிந்து விடும் என்றிருக்கும் போது, ஜுஸ் நிறைந்த பழமான தர்பூசணியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த பழத்தின் வண்ணம் ஒன்றே போதும், ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடத் தூண்டும். துக்காளியைப் போன்றே தர்பூசணிப் பழத்திலும் லைக்கோபைன் உள்ளதால், புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென்களை எளிதில் எதிர்த்து நிற்க இது உதவுகிறது.
பசலை கீரை: கீரைகளில் தண்ணீரில்ன் அளவு அதிகமாக இருந்தாலும், பசலை கீரையைப் போல குறைவான விலைகளில் அவை கிடைப்பதில்லை. இந்த விலை காரணமாகவே அனைவரும் கீரையை வேண்டும் போது வாங்கி சாப்பிட முடிவதில்லை. ஆனால், பசலைக் கீரை மலிவான விலையில் விற்பதால், இதனை வாங்கி உண்டு உடலை மிகவும் வளமாகவும் மற்றும் தண்ணீர் சத்துடனும் பராமரிக்கலாம். ஸ்டார் ஃபுரூட்: மிகவும் சிறப்பான பழமாக இருக்கும் ஸ்டார் ஃபுரூட் சாறு நிறைந்த பழமாக இருந்து தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது உடலுக்கு வேறு சில நன்மைகளையும் செய்கிறது. அன்னாசிப் பழத்தைப் போன்ற தோலைக் கொண்டிருந்தாலும், இனிப்பையும், புளிப்பையும் சேர்ந்தாற் போல கொண்டிருக்கும் பழமாக ஸ்டார் ஃபுரூட் உள்ளது. கோடைக்காலத்தில் இந்த பழத்தை அதிகளவில் சாப்பிடுவதன் மூலம் சீறுநீரகப்பைகள் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன. ஏனெனில், இந்த பழத்தில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி: இந்திய சந்தைகளில் கோடைக்காலங்களில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் கிடைப்பது சற்றே கடினமாக இருந்தாலும், ஓரளவு தேடி எடுத்து விட முடியும். இந்த பழம் கையில் வந்த பின்னர் தண்ணீரில்லாமல் உடல் வறண்டு போவதைப் பற்றிய எண்ணம் உங்களிடமிருந்து விலகி விடும். இந்த பழத்தின் இயற்கையான இனிப்பு, உங்களுடைய உடலை மிகச்சிறந்த வகையில் வளப்படுத்தும். தினமும் இந்த பழத்தை கை நிறைய சாப்பிட்டு நோயின்றி வாழத் தொடங்குகங்கள்
ப்ராக்கோலி: முறுமுறுப்பாக இருக்கும் ப்ராக்கோலி கோடைக்காலத்தில் தாகத்தைத் தணிக்கக் கூடிய சிறந்த உணவாகும். அதிகளவு தண்ணீர்; மட்டுமல்லாமல், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவற்றையும் அதிகளவில் கொண்டுள்ளதால், புற்றுநோயை உருவாக்கும் செல்களை உடலிலிருந்து அப்புறப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.
பரங்கிக்காய்: தர்பூசணிக்கு அடுத்தாற்போல், சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய மற்றுமொரு காய் பரங்கிக்காயாகும். ஒரு கால் பகுதியளவு பரங்கிக்காயை சாப்பிட்டால் போதும், உங்களுக்கு ஒரு நாள் முழுவதும் தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை எளிதில் கிடைத்து விடும். மேலும் இந்த அளவில் 50 கலோரிகள் நிரம்பியுள்ளது.