ஓர் அரசன் ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்து விடுகிறார்.
அரசே எனக்கு மன்னிப்புக் கொடுங்கள் என்று கேட்கிறான் அவன்
என்னால் முடியாத காரியம் ஏதாவது உன்னால் செய்து காட்ட முடியுமானால்
உனக்கு மன்னிப்பு வழங்கலாம். . . அப்படி ஏதாவது செய்ய முடியுமா உன்னால்!
மன்னா எனக்கு குதிரையை பறக்க வைக்க தெரியும்.
என்ன குதிரையை பறக்க வைப்பாயா? உடனே எனக்கு அதை காண்பி
கண்டிப்பாக என்னால் உங்கள் குதிரையை பறக்க வைக்க முடியும்
ஆனால் ஒரு நிபந்தனை குதிரையை பழக்குவதற்கு எனக்கு ஒரு வருடம் அவகாசம் வேண்டும்.
மன்னரும் தண்டனையை தள்ளி வைத்து அவனை விடுவிக்கிறார்.
ஒரு நாள் அவன் நண்பன் கேட்டான்
உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது,
குதிரை எங்காவது பறக்குமா இப்படிப்போய் மன்னரிடம் சொல்லி இருக்கிறியே?
அப்போது அவன் சொன்னானாம்
இதோ பாருடா! ஒரு வருடத்தில் இயற்கையாக நான் இறந்து போகலாம் ,
மன்னர் இறந்து போகலாம் அல்லது குதிரையே கூட பறக்கலாம்
யாருக்குத் தெரியும்
நீதி;
வாழ்க்கையில் நாம் கடைசி வரையில் நம்பிக்கையோடு செயல்படவேண்டும்
எதற்காகவும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.