Home » உடல் நலக் குறிப்புகள் » குறட்டையை தவிர்க்க சில தகவல்

குறட்டையை தவிர்க்க சில தகவல்

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.

குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top