Home » தன்னம்பிக்கை » தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!
தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை

தன்னம்பிக்கை

•உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
•உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
•தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
•தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
•விழவது நம் வாடிக்கை
•வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
•தொழுவது நம் நம்பிக்கை
•நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
•மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
•முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
•கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே தெய்வம் உண்டு
•கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
•வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
•தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
•உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
•உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
•என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
•என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
•பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
•இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.

போராட்டம்

•விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
•வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
•உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
•பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
•உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
•உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
•மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
•தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
•கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
•கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
•எடை இல்லாது விலையில்லை
•நடை இல்லாது நாட்டியமில்லை
•படை இல்லாது போருமில்லை
•தடை இல்லாது வெற்றியுமில்லை
•காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
•கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
•துடுப்பு இலொலாமல் தோனியில்லை
•துணை இல்லாமல் பயணமில்லை
•படி இல்லாமல் ஏணியில்லை
•அடி வாங்காது ஏற்றமில்லை
•கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
•இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி

•தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
•கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
•ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
•ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
•கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
•உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
•சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
•புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
•அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
•பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
•உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
•உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
•வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
•விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
•நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
•நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
•தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
•ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
•துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
•துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

•குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
•குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
•துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
•தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
•உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
•உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
•பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
•பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
•இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
•நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
•பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
•சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
•துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
•துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
•கையகலமே அவன் கொடை
•கருணை மனத்தின் அகலமே மாண்பு
•கண்ண கலமே அவள் கல்வி
•கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
•திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
•வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை

•தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
•அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
•இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
•ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
•அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
•துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
•அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
•துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
•உழைப்பதற்கு முதுகு வளை
•எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
•அறிஞருக்கு தலை வணங்கு
•அறிவானுக்கு தலை குணியாதே
•வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
•நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
•கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
•வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
•வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
•நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
•அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
•ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை

•பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
•பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
•அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
•அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
•அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
•அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
•ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
•கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
•கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
•குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
•துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
•கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
•வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
•தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
•கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
•குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
•ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
•கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
•இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
•இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top