Home » படித்ததில் பிடித்தது » “அறிந்ததும் அறியாததும்”-அகத்தியரின் அறிவுரைகள்!!!
“அறிந்ததும் அறியாததும்”-அகத்தியரின் அறிவுரைகள்!!!

“அறிந்ததும் அறியாததும்”-அகத்தியரின் அறிவுரைகள்!!!

உடைந்து போன சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யக்கூடாது. அப்படி செய்தால் குடும்பத்துக்கு கெடுதல். கணவன் மனைவி பிரிய வேண்டி வரும்.

சாலி கிராமத்தில் பல வகைகள் உண்டு. இவற்றில் நரசிம்ஹர் சாலிக்ராமமும், சுதர்சன சாளிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம் கொண்டவை. அப்படிப்பட்ட சாலிக்ராமங்களை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது. அவைதான் என்று தெரியவந்தால் உடனே கோவிலுக்கு கொடுத்து விடவேண்டும். ஹிரண்யனை வதம் செய்யும் போது நரசிம்ஹாரின் வாயிலிருந்து தெறித்த ரத்தம் தான் நரசிம்ஹர் சாளிக்ராமமாக மாறியது. அது வீட்டை, சொத்தை, ஆரோக்கியத்தை, குட்டி சுவராக்கி விடும். கெட்ட ஆவிகள் கொடிகட்டி பரக்க ஆரம்பிக்கும்.

ஒரு மனிதனுக்கு ஜாதகம் என்பது, எப்போது கருவாக உருவாகிறானோ அப்பொழுதே ஜாதகம் கணிக்க பட்டாயிற்று. அது தான் உண்மையான ஜாதகம். ஆனால், இதை பிரம்மாவும், சித்தர்களும் தான் அறிவார்கள். பிறந்த நேரப்படி ஜாதகம் என்பது மனிதர்கள் எழுதுவது. அது உண்மையான ஜாதகம் அல்ல.

ஒரு திருமணத்தில் தாலி என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. அதை செய்யும் முறை ஒன்று உண்டு. வீட்டிற்கு பொற்கொல்லரை அழைத்து வந்து, ஒரு அருமையான நன்னாளில், சந்திராஷ்டமம் இல்லாத நாளில், அஷ்டமி, நவமியைத் தவிர்த்து விடியற்காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கத்தை உருக்கி, இதற்கு பிறகே திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

இந்த அவசர கால உலகத்தில் அனைவரும் கடையில் சென்று தயார் படுத்தப்பட்ட தாலியை வாங்குகிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று சொல்லி போவார்கள். அந்த நாள் அந்த கல்யாண தம்பதியர் இருவருக்கும் உகந்த நாளா என்று பார்க்கவேண்டும். கடையில் நல்ல நாள் பார்த்து வாங்கிய தாலியை பூசையில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லது கோவிலில் கொடுத்து பூசை செய்ய வேண்டும். அப்படி செய்தால், ஏதேனும் தோஷம் இருந்தால் அது விலகிவிடும்.

நாம் அறியாமலே சில தவறுகளும் நடக்கும். கவனமாக இருக்கவேண்டும். திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்கும் அந்தணர், அதைப் புனிதப் பொருளாக எண்ணி, கையில் வைத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை சொல்லிய பின்பு, மணமகனிடம் கொடுக்கவேண்டும். தாலி தொலைந்து விடக் கூடாது என்பதற்காக அதை அந்தணர் இடுப்பில் சொருகி கொள்ளக் கூடாது. உண்மையில், புனிதமான பொருட்களை மார்புக்கு கீழே வைத்துக் கொள்ளக்கூடாது, என்பது விதி. இடுப்புக்கு கீழே சொருகிவிடும் தாலியில், வியர்வை படும் சாத்தியங்கள் அதிகம். வியர்வை ஒளிக்கற்றை தாலியின் புனிதத்தை கெடுத்து விடும்.
-ஆன்மிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top