நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை…
நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?’ – ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? ‘தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?’ என்பதை அறிய யாருக்கும் எந்த க்ளூவும் அப்போது கிடைக்கவில்லை.
1816-ம் வருடத்தில் இருந்து 1821-ம் ஆண்டில் அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்குக் கிடைத்தன. அப்போதுதான் நெப்போலியனின் முடிகளில் ஆர்சனிக் அமிலம் கலந்திருந்தது முதல் க்ளூவாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘ஆரோக் கியமான ஒரு மனிதரின் முடியில் சோதனையில் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு ஆர்சனிக் இருப்பது இல்லை. எனவே, நெப்போலியன் மரணத்துக்குக் காரணம் விஷமாக இருக்கலாம்’ என்று கண்டுபிடித்தார்கள். ‘விஷம் கலந்த காற்றை அவர் சுவாசித்ததாலோ, விஷம் கலந்தவற்றை உண்டதாலோ நெப்போலியன் மரணம் அடைந்திருக்கலாம்!’ என்று லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார்.
பின்பு, நெப்போலியனின் அறை பற்றிய ஆய்வுகள் இரண்டு க்ளூக்களை அளித்தன. ஒன்று, அங்கு இருந்த ஓவியம். இரண்டாவது, அந்த அறையின் சுவரை அலங் கரித்த வால் பேப்பர்கள். இவை இரண்டிலுமே ‘மெள்ளக் கொல்லும்’ ஸ்லோ பாய்சன் பூசப்பட்டு இருந் தது. ‘அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே இருந் ததால், விஷத்தைச் சுவாசித்துச் சுவாசித்து அவர் இறந்துவிட் டார்!’ என்று ஒரு தரப்பு ஆய்வாளர் கள் சொன்னார்கள்.
‘வால் பேப்பரை ஒட்டும் பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்க முடியாமல் நெப்போலியன் வால் பேப்பரைக் கிழித்துத் தின்றதால் இறந்தார்’ என்று இன்னொரு தரப்பு அறிவித்தது. இன்னும் ஊர்ஜிதமான உண்மை வெளிவந்த பாடு இல்லை