Home » உடல் நலக் குறிப்புகள் » செம்பருத்தி!!!
செம்பருத்தி!!!

செம்பருத்தி!!!

இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு.. நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல… மருந்தாகவும் பயன்படுகின்றன.

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க…

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு…

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர…

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க…

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு…

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top