உங்கள் கோபமே உங்களைக் கொல்லக்கூடும்.
கோபப்படும்பொழுது தேவையான ரத்தம் இருதயத்திற்குச் செல்வதில்லை. அதனால் மரணம் ஏற்பட வாய்ப்பு என்று அண்மையில் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
கோபத்தை குறைத்துக்கொள்ள கோபத்தைப் போக்கிக்கொள்ள இதோ சில வழிகள்….
நமக்கு வருகின்ற பிரச்சினைகளைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் (சிலர் சொல்லத் தொடங்கும் போதே கோப்ப்படுவார்கள்)
பல சமயங்களில் கோபம் உண்டாவதற்கு நாமேதான் காரணம் என்பதை உணர வேண்டும்.
பிறரால் கோபம் ஏற்பட்டபோதும் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று அவரது மனநிலையில் இருந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனம் விட்டுச்சிரித்துப் பழகிக் கொண்டால் கோபம் கொஞ்சம் குறையும்.
பலருக்குப் பிறர்மீது உள்ள சந்தேகத்தினாலேயே கோபம் வருகிறது. பிறரை நம்பக்கற்றுக் கொள்ள வேண்டும்.
என்ன நேர்ந்தாலும் கோபம் கொள்ளக்கூடாது என்று உறுதியுடன் இருக்க வேண்டும்.
(கோபம் வரும்போது இந்த உறுதியை ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.)
பிறரை – அவர்கள் செய்த சிறு தவறுகளை மறந்து மன்னிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்பொழுதிருந்தே கோபம் இல்லாது வாழ வேண்டும் என்று வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு நாள் படுக்கைக்கு போகும் போதும் எத்தனை முறை கோபப்பட்டோம்? ஏன்? இனி எப்படித்தவிர்க்கலாம் என்று எண்ணிப்பார்த்து நாளை முழுவதும் எந்தச்சூழ்நிலையிலும் கோப்ப்படாமல் இருப்பது என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையே மகிழ்ச்சியானதாக இருக்கும். சந்திக்கின்ற எல்லோருமே நண்பர்களாகத் தெரிவார்கள்.