மனிதர்களில் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக வருந்துபவர்களோ அல்லது ஆணாகப்பிறந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை.
ஏதோ சிலர் துயர்தரும் சம்பவங்களின் போது “பெண்ணாக ஏன் பிறந்தோம்” என்று நினைத்தாலும், பெண்ணாகப் பிறந்ததற்காக தன்னையே நொந்து கொள்பவர்கள் வெகுசிலரே. பெண்ணாகப் பிறந்ததால் பல நன்மைகளும் உண்டு.
ஆணாகப் பிறந்தவர்களுக்குப் பலகஷ்டங்களும் இருக்கவே செய்கின்றன. இயற்கையின் விசித்திரம் என்னவென்றால் ஆண் தனது ஆண்மையை நேசிப்பது போலவே பெண்ணும் தனது பெண்மையை நேசிக்கும்இயல்புணர்ச்சிகள் மனிதர்களிடம் இருக்கின்றன.
மனிதக் கருவுயிரின் (Embryo) மரபுவழித் தனிச்சிறப்புப் பண்புகள் தாய் தந்தையரின் சரிசமனான இனக்கீற்றுக்களில் (chromosomes) இருந்தே உருவாகின்றன. ஆனால் பிறக்கும் உயிரின் “பால்” எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்று விஞ்ஞானம் விளக்குகிறது. இனக்கீற்றுகள் X,Y என பாகுபடுத்தப்படுகின்றன.
பெண் உயிரணு (Cell) இரண்டு X இனக்கீற்றுகளை கொண்டதாகவும் ஆண் உயிரணு ஒரு X இனக்கீற்றையும் ஒரு Y இனக்கீற்றையும் கொண்டதாகவும் உள்ளன. கருத்தரிக்கும் பொழுது ஆணின் கருவுயிர் நீர்மத்திலுள்ள உயிரணு பெண் உயிர்மத்துடன் ஐக்கியமாகி ஒருமுழுமையான உயிர்மம் உருப்பெறுகிறது.
பின்னர் உயிர்மப் பிளவியக்கம் (Mitosis) நடைபெற்று கரு உருவாகின்றது X இனக்கீற்றும் Y இனக்கீற்றும் சேர்வதால் சிசு பெண்ணாகவும் ஏனைய வகைகளில் இனக்கீற்றுகள் சேர்ந்துகொள்ளுமிடத்து ஆணாகவும் உருப்பெறுகின்றன. இவ்வாறாக இனக்கீற்றுகள் சேர்ந்து ஆணோ, பெண்ணோ உருவாவது தற்செயலாக நடைபெறும் காரியம் அல்ல. நமது கர்மாவே இதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.
பெண்ணிடத்தோ ஆணுக்கு இருக்கவேண்டிய குணாம்சங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பிறப்புகள் தோறும் படிப்படியாக பரிணமிப்பது இயல்பு. இதேபோல் ஆணிடமும் பெண்மை மயமான குணாம்சங்கள் தோன்றுவதுண்டு. இந்த நிலைக்கு நமது சிந்தனைகளும் செயற்பாடுகளுமே காரணங்களாகவுள்ளன.
இப்பரிணாம மாற்றங்கள் முதிர்வடையும்பொழுது இறப்பவர்கள் மறுபிறப்பில் ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் பிறக்கக்கூடும். இந்த மாற்றங்கள் பூரணத்துவம் பெறமுன்னர் இறப்பவர்கள் ஆண்மையுடைய பெண்களாகவும் பெண்மையுடைய ஆண்களாகவும் பிறக்கிறார்கள்.