Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 25

பேய்கள் ஓய்வதில்லை – 25

எங்க மகள் எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு? என்று செல்வியின் பெற்றோர் கேட்கவும் பதில் பேசாமல் தலைகுனிந்து நின்றான் வினோத். பாய்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு உங்கள் மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை! அவளை கட்டாயம் கண்டுபிடித்துவிடுவோம். என்று சொன்னார்.

அதைக்கேட்டதும் அந்த அம்மாள் அப்படியே முகம் வெளிறி  அய்யோ! அப்படின்னா என் மக இங்க  இல்லையா? என்றவாறு மயங்கி சரிந்தாள். இதைக்கண்டதும் அவளின் கணவர் என்னப்பா இது! என்ன ஆச்சு? என்றவாறு அப்பெண்மணியை தூக்கி மடியில் நிறுத்தி முகத்தில் தண்ணீர் தெளித்தார்.

பாய் தான் முதலில் பேசினார் நீங்க பயப்படறதுக்கு எதுவும் இல்லை! உங்க மக மேல ஆவி ஒண்ணு புகுந்திருக்கு! அதனாலதான் இப்படியெல்லாம் நடந்துக்கிறா!

ஆவியா?

ஆமாம்! பிரவிணா என்ற பெண்ணின் ஆவி! அது எப்படியோ உங்க பெண்ணோட உடம்பில புகுந்திருக்கு!

என்னது ப்ரவீணாவா?

ஆமாம்! உங்களுக்கு ப்ரவீணாவை தெரியுமா?

தெரியாம என்ன? நாங்க சென்னையில இருந்தப்ப எங்க பக்கத்து வீட்டுல வசிச்ச பொண்ணு அது!

திடீர்னு வீட்டுல கேஸ் வெடிச்சு தீப்பிடிச்சு இறந்து போச்சு! அவளோட புருசனும் காப்பாத்த போயி செத்து போயிட்டானே!

அது விபத்து கிடையாது சார்! திட்டமிட்ட கொலை! அவங்களை பழிவாங்கத்தான் அந்த ஆவி உங்க பொண்ணோட உடம்புல புகுந்திருக்கு!

அது என்ன செய்யும்?

அது உங்க பொண்ணோட உடம்புல தங்கியிருக்கு! அதனோட காரியம் முடிஞ்சதும் போயிரும்.

அதுவரைக்கும் என் பொண்ணுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?

வர்றதுக்கு சான்ஸ் இருக்கு! ப்ரவீணாவோட ஆவிதான்  உங்க பொண்ணோட உடம்புல இருக்கு. உடம்பு உங்க பொண்ணோடடதுதான்! பிரவீணா செய்யற எந்த செயலும் உங்க பொண்ணை பாதிக்கத்தான் செய்யும்.

அப்ப இதிலிருந்து மீள என்ன வழி?

அந்த பேயை விரட்டறதுதான் ஒரே வழி?

விரட்ட வேண்டியதுதானே!

பாய் ஒரு நிமிடம் மவுனித்தார்.

ஏன் மவுனமாயிட்டீங்க பாய்?

அவளை விரட்ட எனக்கு மனசு இல்லை!

ஏன்?

அவ என் மகளைப் போல! அவளை கொன்னவங்களை  அவ பழி வாங்கனும்! இதை சொன்னபோது பாயின் கண்கள் சிவந்தன.

என்னது ப்ரவீணாவா?

ஆமாம் என் அக்கா! ரவியின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வரவும் அவ இங்கே வந்து கொண்டிருக்கா! என்று சுவாமிஜி  ஒரு மர்ம புன்னகையுடன் கூற வியந்து போய் நின்றான் முகேஷ்!

என்ன சித்தப்பா! ப்ரவிணாதான் செத்து போயிட்டதா  சொல்றாங்களே! அவ எப்படி இங்க வருவா?

வருவா? நீ பார்க்கத்தானே போறே?

எப்படி சித்தப்பா?

இவ்வளவு நேரம் பொறுத்துகிட்டே இல்லே! இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்க! இப்ப அவ திருப்பதி வந்துட்டா! இனிமே கதையில திருப்பம்தான்! என்றார் சுவாமிஜி அட்டகாசமாய் சிரித்தபடி!

சித்தப்பா! எனக்கு எதுவுமே விளங்க மாட்டேங்குது!

எல்லா விளக்குமும் ப்ரவீணா வந்ததும் கிடைக்கும்!

அது வரைக்கும் நாம என்ன பண்ணலாம்?

எனக்கு உன் ப்ரெண்ட் மட்டும் கேஸ் இல்லை! இன்னும் எத்தனையோ பேரு இருக்காங்க!

எங்கே?

இதோ வெளியில காத்துகிட்டு இருக்காங்க! வா என்னன்னு போய் கேட்கலாம்!

வெளியில் ஒரு பத்து பதினைந்து பேர் கூடியிருந்தனர்.  சுவாமிஜி வெளியில் வந்ததும் சாமிஜி நமஸ்காரமண்டி! என்று இருகரம் கூப்பி வணங்கினர். நமஸ்காரமண்டி! ஏமி விவகாரம்! செப்பண்டி! என்று அவர்களை கேட்டார் சுவாமிஜி.

அவர்களிடம் சுவாமிஜி தெலுங்கில் சரளமாக உரையாடினார். பின்னர் அவர்கள் ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அவன் முகம் வெளிறிப் போய் இருந்தது. கன்னங்கள் ஒட்டி கண்கள் குழி விழுந்து போய் இருந்தது.

அவனுக்குத்தான் ஏதோ வியாதி போலும்! அவனை  எப்படி குணப்படுத்த போகிறார் என்று ஆர்வமுடன் கவனித்தான் முகேஷ்.

சுவாமிஜி அவனை அங்கிருந்த முருகர் ஆலயத்தின் முன் நிறுத்தினார். ஆலயத்தின் உள்ளே சென்று ஒரு எலுமிச்சம் கனியை கொண்டு வந்து அவன் உடல் முழுக்க தடவினார். வாயில் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டே அந்த எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி அவனை சுற்றினார்.

அதுவரை நிற்க முடியாமல் நின்றிருந்த அவன் அப்படியெ வெறிகொண்டவன் போல சிரிக்க ஆரம்பித்தான். அப்படியே சுழன்று ஆடினான். சுவாமிஜி எதற்கும் அசைய வில்லை! அந்த கனியை சுற்றி வீசிவிட்டு ஒரு பாட்டிலை எடுத்துவந்து அதில் அவனது முடியை கத்தரித்து போட்டார்.பாட்டிலுக்கும் அவனது தலைமுடிக்கும் ஒரு தர்பை புல்லை கொண்டு இணைப்பு கொடுத்தார். பின் மந்திர உச்சாடனங்கள் செய்ய ஆரம்பித்தார்  ஒரு அரை மணி நேரத்தில் அவனது பேயாட்டம் நின்றது. சுவாமிஜி பாட்டிலை கார்க் கொண்டு மூடினார்.

இப்போது அவனது பேயாட்டம் சுத்தமாக நின்று அமைதியாக இருந்தான். அவனது முகத்தில் சிறிது விபூதியை பூசிவிட்டு அவனுடன் வந்தவர்களை கூப்பிட்டு பயமில்லை! சரியாயிரும்! போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார்.

அப்போது அங்கே செல்வி வந்து நின்றாள்!

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top