Home » பொது » சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?
இந்தியாவில் சர்க்கரை நோய் பல மடங்கு பெருகி வரும் நிலையில், சிகிச்சை முறைகள் பல வகையில் புற்றீசல் போல பெருகி வருகின்றன. ஆங்கில மருத்துவ முறையிலேயே பல வகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மருந்துகளும் ஒரே மாதிரி பயன் தருகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.
சர்க்கரை நோய் வந்துவிட்டால், உடனே கவனித்துக் கொள்வது நல்லது. இதய பாதிப்புக்கு அறிகுறிகள் உள்ளது போல, இதற்கும் பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், இதய பாதிப்பை கண்டுகொள்ளாவிட்டால், மாரடைப்பில் உயிர் பறிபோகும் ஆபத்து உள்ளது; வெளியே தெரியாமல் ஆளை கொல்லும் நோய் மாரடைப்பு. ஆனால், சர்க்கரை நோய் பாதிப்பு, அதைவிட மோசமானது என்றாலும், அதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும்.
ஒன்றன் பின் ஒன்றாக : இதை அறிய ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது. அப்படி செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவுகள் மோசம் ஆகும். கண் பார்வை பறிபோகும்; சிறுநீரகம் பாதிக்கும்; இதய பாதிப்பு வரும். இப்போது, இந்தியாவில் கையாளப்படும் சர்க்கரை நோய் சிகிச்சைகளில், நோயாளிக்கு அதிகபட்சம் 80 சதவீத குணத்தை தான் தருகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.
அருமையான டாக்டர்கள் : அருமையான மருத்துவர்கள், அருமையான மருத்துவமனைகள் உள்ளன. இருந்தும் போதுமான அளவில் பயன் தரும் மருந்துகள் இல்லை. பல ஆண்டாக உயர் ரத்தஅழுத்தம் தொடர்ந்தால், அதுவே சர்க்கரை நோயையும் தரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது இது ஏற்படுகிறது. கணையத்தில் இன்சுலின் சுரப்பி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுத்து, சீராக்கும் பணியை இந்த சுரப்பி செய்கிறது. இது அதிகம் சுரக்காத நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. கணையத் தில் உள்ள இன்சுலின் சுரப்பியை முழு அளவில் இயங்க வைப்பது, அதில் உள்ள “பீட்டா’ செல்கள் தான்.நான்கு கோடி பேர் : இந்தியாவில், நான்கு கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால், ஒன்றரை கோடி பேருக்கு தான் இதன் பாதிப்பு தெரிந்து< சிகிச்சை பெறுகின் றனர். மற்றவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ கண்டுகொள்ளாமல் உள்ளனர்.சிகிச்சை பெறுவோரிலும், 15 சதவீதம் பேர் தான், மருந்துகளை சாப்பிட்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
686 வகை மருந்துகள் : இந்தியாவில், சர்க்கரை நோய் தீர 686 வகை மருந்து, மாத்திரைகள் உள்ளன. பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த பிராண்டு மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. சமீப காலமாக சர்க்கரை நோய் , 40 வயதை தாண்டாதவர்களுக்கு வரக்காரணம், அவர்களின் “லைப் ஸ்டைல்’ தான். வாழ்க்கை முறை, சாட் உணவுகளும் தான் காரணம். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, “திரிப்டி ஜீன் சிண்ட்ரோம்’ கோளாறு உள்ளது. இதனால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
நீண்ட கால நோய் : சர்க்கரை நோய், கொடுமையான நோய் அல்ல; நீண்ட காலம் இருக்கும் நோய். நீண்ட காலம் இருப்பதன் மூலம் அது கொடுமையான நோயாக மாறுவதும், மாறாததும் நோயாளியின் சிகிச்சை, உணவு, வாழ்க்கை முறையில் உள்ளது. நீண்டநாள் மருந்து சாப்பிடுவதுடன், உணவு முறையிலும் கட்டுப்பாடு முக்கியம். அப்போது தான், நீண்ட நாள் சர்க்கரை நோய், கொடுமையான நோயாக மாறாமல் இருக்கும்.
மருந்து எது சரி : பெரும்பாலான மருந்துகள், உடலில் இன்சுலின் சேர்ந்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவே பயன்படுகின்றன. ஆனால், கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி வேலை செய்வதற்கு மருந்துகள் குறைவே. கணையத்தில் சுரக்காத இன்சுலினை மருந்தால் தருவதை விட, கணையத்தில் இன்சுலினை உருவாக்கும் “பீட்டா’ செல்களை செயல்படுத்தி அதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை பெருக்கவும் மருந்துகள் உள்ளன.
பீட்டா – ஆல்பா : சில வகை மருந்துகள் மட்டும் தான் பீட்டா – ஆல்பா செல்களை ஊக்குவிக்கின்றன. சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது ஜனோவியா என்ற மருந்து. அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நிறுவனம் மெர்க். இதன் இந்திய நிறுவனம் எம்.எஸ்.டி., பார்மசூட்டிக்கல்ஸ் இப்போது இந்த மருந்தை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆல்பா செல்லிலும், கணையத்தில் “பீட்டா’ செல்களை ஊக்குவிக்கும் இந்த மருந்து செயல்படுகிறது.
மருந்து – உணவு – பயிற்சி : மருந்தால் மட்டும் சர்க்கரை நோய் போகாது. உணவு, உடற்பயிற்சியும் முக்கியம். இந்த வகையில், ஆல்பா , பீட்டா செல்கள் பாதிக்காமல் செயல்பட மருந்து உதவினாலும், உணவில் கட்டுப்பாடும், வாக்கிங் உட்பட,உடற்பயிற்சியும் சேர்ந்தால் தான் முழுமையான தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பல மருந்துகள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் காலங்களில், வெளிநாட்டு தரமான மருந்துகள் கிடைப்பது அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top