மற்றொருவர் குழாய் செய்து அதை நாய் வாலில் சேர்த்துக் கட்டினார். இன்னொருவரோ நாய் வாலை உருவிவிட்டுக் கொண்டே இருந்தார். இவ்வாறு மாதங்கள் பல ஓடின. மன்னரும் நாய் வால் நிமிர்ந்ததா என்பதை அறிய விரும்பினார். நாய்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
நாய் வாலில் கட்டிய இரும்புத் துண்டை எடுத்தவுடன் பழையபடியே நாய்வால் சுருண்டு கொண்டது. அதேபோல் குழாயை எடுத்தவுடன் நாய்வால் சுருண்டு கொண்டது. இதன் மூலம் இயற்கைத் தன்மையை செயற்கைச் செயலால் மாற்ற முடியாது என்பதைமன்னர் நன்கு அறிந்தார். அடுத்து தெனாலிராமனின் நாயைக் காண்பதாகச் சொன்னார். தெனாலிராமனும் நாயை மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினான். அது நிற்கக் கூட சக்தியில்லாமல் இருந்தது. அதன் வாலை மன்னர் பார்த்தார்.
அந்த நாய் பட்டினியால் வாடியதால் அதன் வால் நேராகவே இருந்தது. தெனாலிராமனும் ”மன்னரிடம் பார்த்தீர்களா என்னடைய நாயின் வாலை நேராக்கி விட்டேன்” என்றான்.
இதைக் கேட்ட மன்னர், ” என்னடா தெனாலிராமா, வாயில்லாப் பிராணியை பட்டினிப் போட்டு விட்டாயே, அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது” என்றார்.
”மன்னரே என்னை மன்னியுங்கள். இப்போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்றான்.