Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும்

சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும்

(ESP 05)

brain and esp tamilஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன்போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம்.

நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம்.

மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதியுண்டு இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை. ( இப்பகுதியிலேயே எலிகளுக்கு மின்னதிர்வை கொடுத்து பரிசோதித்தார்கள். இது பற்றி ஏற்கனவே முதலாவது பதிவில் பார்த்திருந்தோம். )
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் அந்த பகுதி அனைவருக்கும் தூண்டப்படுவதில்லை என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அந்த பகுதியை செயற்கையாக தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அவ் ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது!

சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக்கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் காட்டப்பட்டுள்ளது. ( நெற்றிக்கண் பொறி மூலம் முருகன் பிறந்ததும் இவற்றில் ஒன்று. )

yoga shivaபுராணங்கள் என்பது திருபுபடுத்தப்பட்ட நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே ( ஆதாரங்களுடன்) நான் பதிவுகளை எழுதுவதுண்டு. அந்த வகையில் பார்த்தால், சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும். அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம். ( அறிவுக்கண் என்ற சொல்லிற்கு ஏற்றாற்போல்.)
சாதாரன‌ மனிதர்களில் அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. ( ESP மற்றும் ஏனைய பல அறிவியல் சார்ந்து முன்னேறிய சமுதாயமே எமது சமுதாயம் என நான் பல இடங்களில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டு எழுதும் போது… ஒரு மேம்பட்ட சமுதாய மக்கள் ஒரு ESP மனிதரை எப்படி கடவுளாக கருதினார்கள் என்ற லொஜிக்கான கேள்வி உங்களுக்கு எழலாம். அது எப்படி சாத்தியமானது என்பதை “லெமூரியா அழிவு” தொடர்பாக வர இருக்கும் பதிவுகளில் எதிர் பாருங்கள். )

மேலும் சிவன் பற்றி பேசினோம் ஆனால்,
சிவன் தொடர்பாக கூறப்படும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே காட்டப்பட்டுகிறார்கள். மற்றும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் எழுகிறது… அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.

அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று (ஆனால் சற்று குறைவான) சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. [ இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது! காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் (சைவம்) சம்பந்தப்பட்டது; ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். ( நமது பிக்பாங் கொள்கைக்கு கூட இது பொருந்தும்! ) ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது. ]

God_brainஎனது சந்தேகம் என்னவென்றால், தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது. அப்படியானால் தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை இயக்க முடியுமா? இதன் மூலம் விசேட சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.

ESP பற்றி ஆய்விக்கட்டுரை எழுதும் போது அப்படியே உங்களிடமும் சில சந்தேகங்களை கேட்டுவிட்டேன். தியானம் மற்றும் ESP தொடர்பாக தெரிந்தவர்கள் இது பற்றிய உங்கள் கருத்துக்களை அல்லது எங்காவது படித்ததற்கான தொடுப்புக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

இனிவரும் பகுதிகளில்… நவீனத்தில் இந்த ESP சக்தியை பயன்படுத்திய விசேட சந்தர்ப்பங்களை பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top