சம்பவம் நடந்தது 41 ஆண்டுகளுக்கு முன். அது 1970ஆம் ஆண்டு. இந்தோனேஷியா நாட்டு கடல் பரப்பு, பஹமாஸ் பகுதி.. கிட்டத்தட்ட பேரி தீவுக்குஅருகில் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். கடல் அலைகள் அந்த அளவிற்கு இல்லை. மிதமாக, மிகவும் மிதமாகத்தான் இருந்தது.
படகு கிழித்துச் செல்லும் தண்ணீர் சத்தத்தைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. எங்கும் நிசப்தம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அங்கு சின்ன கப்பல் கூட தென்படவில்லை. அந்த கடல் பரப்பில் ஒரு படகில் இரண்டு உதவியாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தார் டாக்டர் பிரவுன்.
பிரவுனுக்கு எப்போதும் கடலுக்குள் இருக்கும் விசித்திர மீன்கள், பாறைகள், செடி வகைகள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்வது வழக்கம். கிடைக்கும் உயிரினங்கள், செடிகள் இவற்றிலிருந்து ஏதேனும் மருந்து தயாரிக்கலாம் என்பதுதான் இவரின் ஆராய்ச்சி. இருந்தபோதிலும்.
கடலின் தரை மட்டம் வரை சென்று அங்கு வாழும் ஜீவராசிகளைப் பார்ப்பது என்பது பிரவுனுக்கு எப்போதும் அலாதியான ஒரு சுகம்.
அப்படித்தான் அன்றும் பிரவுனுக்கும் நிகழ்ந்தது. பேரி தீவு அவருக்கு பரிட்சயம் இல்லாத பகுதிதான். தன் ஆராய்ச்சிக்கான ஏற்பாட்டிற்கு தயாரானார் பிரவுன். அதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்துகொண்டு, தன் உதவியாளர்களுக்கு கையசைத்துவிட்டு அந்த கடல் பரப்பில் குதித்தார்.
அழிந்துபோன மாபெரும் ஒரு நகரம், ஒரு அதிசயம் பார்க்கப்போகிறோம். அந்த கடற் பகுதி, வரும் காலங்களில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஆராயச்சிக்கான இடமாக மாறப்போகிறது என்பதை அதுவரை டாக்டர் பிரவுன் அறிந்திருக்கவில்லை.
வழக்கமான புத்துணர்ச்சியுடன் மெல்ல மெல்ல கடல் அடிப்பரப்பிற்கு நீந்தி சென்று கொண்டிருந்தார் டாக்டர் பிரவுன்.
வண்ண வண்ண மீன்கள், பிரவுனுக்குப் போட்டியாக நீந்திக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் தொட்டு தடவிக்கொண்டு புத்துணர்ச்சியோடு தன் காமிராவால் உள்ளே படம் எடுத்துக்கொண்டும் விசித்திரமான செடிகளை கையில் ஒரு சிலவற்றை பறித்துக்கொண்டும் இருந்தார்.
கடல் மட்டத்திற்கு மேலிருந்து தன் உதவியாளர்கள் தாங்கள் இருப்பதற்கான சமிக்ஞைகளும் தந்துகொண்டிருந்தார்கள். ஒரு சில மணி நேரங்கள் கடந்திருக்கும். கிட்டத்தட்ட பல அடி தூரத்தில் பளிச் பளிச்சென்று வெளிச்சம். மிகப்பெரிய கட்டடங்கள் இருப்பதுபோன்ற ஒரு பிரமை. கையில் பறித்த செடிகளை எல்லாம் ஒவ்வொன்றாய் அவரின் கையில் இருந்து நழுவ ஆரம்பித்தன. அவரின் கண்கள் எல்லாம் தூரத்தில் ஒளிர்ந்த வெளிச்சம்தான்.
வேக வேகமாக நீந்திச் செல்ல ஆரம்பித்தார். இன்னும் கொஞ்சம்… தொட்டும் விடும் தூரம்தான். தன் கண்ணாலேயே நம்ப முஐயவில்லை பிரவுனுக்கு. கிட்டத்தட்ட 120 அடி உயரம் இருக்கும். இன்னும் கூட உயரமாக இருந்திருக்கலாம். பிரவுனால் அதை அனுமானிக்க முஐயவில்லை. ஆனால், இவரின் தலைக்கு மேல் அந்த வர் இன்னும் 60 அடி உயரம் கூட இருக்கலாம்.
பளிச்சென்று கண்ணைக் கவரும் ஒளிவந்தது அந்த வற்றில் இருந்துதான். அப்படியே மெதுவாக அந்த சுவற்றை தொட்டவாறே நீந்த ஆரம்பித்தார். அது கண்டிப்பாக ஒரு பிரமிடாகத்தான் இருந்தாக வேண்டும் என்பது பிரவுனின் தீர்மானம். கொஞ்சம் தொலைவு நீந்திச் சென்ற பிறகு உறுதி செய்துகொண்டார்.
கொஞ்சம் படிக்கட்டுகள், அந்த பிரமிடு பகுதியில் இருந்து இறங்கிச்சென்றது. தொலைவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து உருக்குலைந்து போன கட்டடங்களின் அடையாளங்கள். எல்லாமே பாசி படர்ந்து, கடற்செடிகள் முளைத்துக்கிடந்தன. ஆனால், அந்த பிரமிடு மட்டும் மிக உயர்ந்த கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது பிரவுனின் அனுமானம். அதற்கு மேலும் பிரவுனால், கடலுக்கடியில் இருக்க முடியவில்லை.
தான் கண்ட காட்சிகளை வெளியில் வந்த பிரவுன் தன் உதவியாளர்களிடம் கூறினார். அவர்களாலும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தச் செய்திகள் செய்தித்தாளில் கொட்டை எழுத்துக்களுடன் பிரசுரமானது. பிரவுன் ஒரே இரவில் பிரசித்தியானார். கண்ட காட்சிகள் குறித்து ஆச்சர்யம் அடங்காமல் தன் சகாக்களிடம் கூறி அங்கலாய்த்தார்.
இந்த செய்தி கடலியல் ஆராய்ச்சியாளர்களுக்க மிகப்பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்தன. ஊகங்களும், அனுமானங்களும் தொடர்ந்து செய்திகளாக வெளிவந்தன. இருந்தாலும், அதற்கான மறுப்புச் செய்திகளும் உடனுக்குடன் வெளிவந்துகொண்டுதான் இருந்தன. இப்படி ஒரு நகரம் எப்படி கடலுக்குள் மூழ்கியது.
சுனாமியால் அழிந்து போனதா? அல்லது இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றம், பூகம்பத்தால், இப்படி கடலுக்குள் சென்றுவிட்டதா என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ஆராய்ச்சியாளர்களின் மூளைகளை குடைந்தது. இறுதிக்கட்டமாக, லண்டனில் இருந்து வெளிவரும் ரூட்டர் செய்தித் தளத்தில் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு செய்தியை வெளியிட்டனர்.
அழிந்து போன அந்த நகரம் உண்மையிலேயே மிகப்பெரும் சுனாமியினால் அழிந்துபோயிருக்கலாம். இந்த நகரத்தின் வடிவமைப்பு, கட்டுமானம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ரஷ்ய கலாச்சாரத்தின் ஆரம்ப இடம் இந்த நகரமாக இருக்கக்கூடும் என்ற தகவலை வெளியிட்டனர். ஆனால், இதுவும் ஒரு அனுமானம்தான். உண்மையான வரலாறை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தோனேஷியாவில் தொலைந்து போன அந்த நகரம் மட்டும் அல்ல; சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட பூம்புகார் நகரமும் அழிந்துபோனதும் இப்படித்தான். புவிவெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரும். இதனால், கடலோர நகரங்கள் அழிந்துபோகும் என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கூறுவதும் உண்மையே.
ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புவிவெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் இருந்திருக்குமா? அதனால்தான் பல நகரங்கள் அழிந்து கடலுக்குள் போய்விட்டதா என்ற மில்லியன் டாலர் கேள்விகள்தான் ஆராய்ச்சியாளர்களிடையே எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
மேலே கூறப்பட்ட விடைதெரியாத விசித்திரங்கள் உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது. எல்லாமே எதிர்காலத்தின் ஜாதகத்தைச் சொல்லும் சமிக்ஞைகளாகக்கூட இருக்கலாம், இந்த விசித்திரங்கள்.