அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர்.
ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார்.
அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை.
மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார்.
‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?’ என எண்ணி மனம் குமுறினார். அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பதே சரியான முறை என்று தீர்மானமாக −ருந்தார்.
உடனே பீர்பாலை வரவழைத்துத, ராஜ்யத்திலுள்ள எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி உத்தரவிட்டார்.
அக்பருடைய −ந்த உத்தரவைக் கேட்ட மக்கள் அனைவரும் திகிலடைந்தார்கள். ஏனென்றால், ராஜ்யத்திலுள்ள ஒவ்வொருவரும் யாருக்காவது எப்பொழுதாவது மருமகனாகத்தானே −ருப்பார்கள்.
அரசருடைய உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பீர்பால் வெகு தீவிரமாக ஏராளமான தூக்கு மரங்களை நிறுவிக் கொண்டிருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.
தூக்கு மரங்கள் யாவும் நிறுவி முடிந்தபின், பீர்பால் அரசரைக் காணச் சென்றார். எல்லா வேலைகளும் செய்தாகி விட்டதாகவும், நாளை தூக்கில் போட்டு விடலாம் என்றும் அதற்குள் அரசர் வந்து அந்த ஏற்பாட்டைப் பார்த்து விடும்படியும் கேட்டுக் கொண்டார் பீர்பால்.
அரசரும் பீர்பாலும் போய் பார்வையிட்டனர். நீண்ட வரிசையில் ஏராளமான தூக்கு மரங்கள் நிறுவப்பட்டிருந்தன. பீர்பால் செய்திருக்கும் ஏற்பாடுகள் யாவும் அரசருக்கு திருப்தியை அளித்தது. நீண்ட வரிசையின் முடிவில், −ரண்டு தூக்கு மரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் நிறுவியிருந்ததைப் பார்த்த அக்பருக்குப் புரியவில்லை. −ந்த −ரண்டு விசேஷ தூக்கு மரங்கள் யாருக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன? எனக் கேட்டார் அக்பர்.
‘வெள்ளிமரம், தங்களுடைய விசுவாச மிக்க ஊழியனாகிய அடியேனுக்கு; தங்க மரம் மேன்மை தங்கிய சக்கரவர்த்தி அவர்களுக்கு!’ என்று கூறினார் பீர்பால்.
‘எனக்குத் தங்கமரமா?’ என்னை யார் தைரியமாக தூக்கில் போடுவது? என்று ஆச்சர்யப்பட்டார் அக்பர்.
‘நீங்களாகவே!’ என்றார் பீர்பால்.
‘எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி நீங்கள் உத்தரவு போட்டீர்கள். அப்படி பார்க்கும்போது நீங்களும் நானும் உள்பட எல்லோரும் யாருக்காகிலும் மருமகன்களே. அதனால், தங்களுக்காக விசேஷமாக தங்கத்தினால் தயாரித்தேன். முதலாவதாக நீங்களும், அடுத்த படியாக நானும் நாளையே ஆரம்பிக்கலாம்; மற்றவர்களை அடுத்தபடியாக நிறைவேற்றலாம்” என்று கூறினார் பீர்பால்.
பீர்பார் கூறியவற்றைக் கேட்டதும் அக்பர் எத்தகைய முட்டாள்தனமான உத்தரவைப் போட்டு விட்டோம் என்பதை உணர்ந்ததோடு, அதை உடனடியாக அரண்மனைக்குத் திரும்பியதும் ரத்து செய்துவிடவும் தீர்மானித்தார்.
அக்பர் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைக் காண அவருடைய அருமை மகள் அங்கே வந்து காத்திருந்தாள்.