பெய்ஜிங்,
பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி மற்றும் புகlலிடம் அளிப்பவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியாவின் பல்வேறு பகுதியில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளும் பாகிஸ்தானிலே உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எந்தஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மும்பை குண்டுவெடிப்பு தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சர்வதேச நாடுகள் வலியுறுத்தலை அடுத்து வழக்கை விசாரிப்பதாக கூறிய பாகிஸ்தான் விசாரணையை தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு நீதிஉதவி மற்றும் ஆயுதஉதவி செய்யப்பட்டு வருகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதிஉதவி மற்றும் புகலிடம் அளிப்பவர்களை தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷியா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் “நான் இதனை பெரிய முன்னேற்றமாக பார்க்கிறேன்,” என்று கூறினார்.
பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவு கொண்டாடிவரும் சீனா, இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முடிவெடுத்து இருப்பது அரிய சந்தர்ப்பம் என்றே பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்நடவடிக்கை, இந்தியாவின் முக்கியத்திற்குற்கு மதிப்பளிப்பது மட்டுமாக இருக்காது, எனென்றால் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணமும் பயங்கரவாதம் அதன் சொந்த பிரச்சினையாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு வெளிநாட்டு படைகளும் உதவிசெய்து வருகிறது என்று சீனா தெரிவித்துள்ளது.