Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » ஆவிகளை திருப்தி படுத்தும் விபசாரிகள் – சுடுகாட்டில் விசித்திரம்.!

ஆவிகளை திருப்தி படுத்தும் விபசாரிகள் – சுடுகாட்டில் விசித்திரம்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆவிகளை மகிழ்விப்பதற்தாக திருவிழா நடத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள மணிக்கண்காட் என்ற இடத்தில் இருக்கும் பழமையான சுடுகாட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.வருடத்திற்கு ஒருமுறை ஆவிகள் திருவிழா என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆவிகள் கோப ரூபமானவை என்பதால், அவை மேலும் பாவங்கள் செய்து பாவிகள் ஆகாமல் இருக்க, அவற்றின் கோபத்தை தடுத்து அவற்றை மகிழச்செய்து, சாந்தப்படுத்துவதே ஆவிகள் திருவிழா என்று கூறப்படுகிறது. ஆவிகளை எப்படி சந்தோஷப்படுத்துவது? காதல் ஏக்கத்திலும், பெண்ணாசையிலும் சிக்கித்தவிக்கும் ஆவிகள் தான் அதிகமாக பாவம் செய்கின்றன என்பதை உள்ளுர்வாசிகள் கண்டறிந்தனர். எனவே அவற்றை திருப்திப்படுத்த அழகிகளை கூப்பிட்டு வந்து மேடையில் ஆட்டம் போட வைக்கிறார்கள். ஆவிகளுக்கு பகலில் வரும் பழக்கம் இல்லை என்பதால் இந்த ஆட்டம் நள்ளிரவில் அரங்கேறும். நேரம் செல்ல செல்ல நடனத்தின் முறை மாறுபடும். ஆவிகளை மகிழ்விப்பதற்காக பலநூறு ஆண்டுகளாக இந்த ஆட்டம் பாட்டம் நடந்து வருகிறது. ஆட்டம், பாட்டம் நடைபெறும் இடம் சுடுகாடு, நள்ளிரவு நடனம், ஆவிகளுக்காக ஆட வேண்டும் என்று பலவிதமான வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்ச்சியில் நடனமாட பயந்து கொண்டு அழகிகள் வரமாட்டார்கள். இதனால் விபசார பெண்களை அழைத்து வந்து ஆட விடுவார்கள். சுடுகாட்டு நிகழ்ச்சி என்பதால் இந்த நடனத்தைப் பார்க்க பொதுமக்கள் யாரும் வருவதில்லை. பெருமளவில் இளைஞர்கள் மட்டும் ஆவிகளுக்கான ஆட்டத்தை காண வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top