Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » 3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் – சாமியார் விஷம் குடித்து தற்கொலை

3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் – சாமியார் விஷம் குடித்து தற்கொலை

தன்னிடம் தெய்வ சக்தி இருப்பதாகவும், இதனால் 3 நாளில் மறுஜென்மம் எடுப்பதாக கூறியும் சாமியார் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெல்காமில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாளில் மறுஜென்மம்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் அதானி தாலுகா கெம்பவாடா கிராமத்தில் உள்ள கணபதி மடத்தின் சாமியார் அனந்தசுவாமி (வயது 80). அவர் கடந்த 40 ஆண்டுகளாக கணபதி மடத்தின் சாமியாராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த மடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனந்தசுவாமி ‘என்னிடம் அபாரமான தெய்வ சக்தி இருக்கிறது, அந்த சக்தியை உலகிற்கு வெளிப்படுத்த எனது உயிரை நானே மாய்த்துக்கொள்ளப் போகிறேன், ஆனால் நான் சாக மாட்டேன், இன்னும் 3 நாட்களில் இந்த கலியுகத்தில் மறுஜென்மம் எடுத்து உயிர் பெறுவேன்’ என்று கூறினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சாமியார் தற்கொலை  மேலும் சாமியார் அனந்தசுவாமியை தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் பக்தர்களின் பேச்சை அவர் கேட்க மறுத்து விட்டார். பின்னர் அனைத்து பக்தர்களும் மடத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்கள். இந்த நிலையில், சாமியார் அனந்தசுவாமி தங்கி இருந்த அறையின் கதவு  காலையில் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், சாமியாரின் அறை கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அப்போது அனந்தசுவாமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பக்தர்கள் கதறி அழுதார்கள். மேலும் அந்த அறையில் விஷப் பாட்டில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அதானி போலீசார், சிக்கோடி போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்.ஆர்.பட்டீல், தாசில்தார் எஸ்.எஸ்.பூஜாரி ஆகியோர் விரைந்து வந்தனர் . பக்தர்கள் கண்ணீர்  அவர்கள் சாமியார் அனந்தசுவாமியின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது அவர் பக்தர்களிடம் கூறியபடி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு சாமியாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனக்கு இருக்கும் அபார தெய்வ சக்தியின் மூலம் இன்னும் 3 நாட்களில் உயிர் பிழைத்து வந்து விடலாம் என்று கருதி சாமியார் அனந்தசுவாமி தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. சாமியார் மறுஜென்மம் எடுத்து மீண்டும் வருவார் என்று சில பக்தர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள். ஏற்கனவே ஒரு முறை சாமியார் விஷம் குடித்ததாகவும், சிகிச்சைக்கு பின்பு அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அதானி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெல்காமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது – See more at: http://seithyulagam.com/fullview-post-177-cat-11.html#sthash.mIfTX0mR.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top