கடுகில் இரண்டு வகை உண்டு.
1) கருங்கடுகு
2) வெண்கடுகு
இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
செரிமானத்தைத் தூண்ட
செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.
இருமல் நீங்க
ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.
வயிற்றுவலி குணமாக
அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.
நஞ்சு உண்டவர்களுக்கு
சிலர் தெரிந்தோ தெரியாமலோ நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.
கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.
சிறுநீர் பெருக்கி
கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
கடுகு எண்ணெய்
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.
விக்கல் நீங்க
வெந்நீர் – 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் – 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
கடுகு நாம் சமைக்கும் அனைத்து சமையலிலும் சேர்க்கிறோம். அதில் அப்படி என்ன சத்து உள்ளது. அதனை ஏன் குறைவாக சேர்க்கிறோம் என்று இன்று பார்க்கலாமா?
கடுகு (Brassica juncea) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
கால்சியம், மங்கனீசியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற தாதுக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆனால் எந்த் ஒரு உணவில் காணப்படாத தாதுப்பொருள் கடுகில் உள்ளது.
இந்த சல்பர் நம் உடலின் ஆரோகியத்துக்கு சிறிதளவே தேவைப்படுகிறது. அதனால் தான் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டால் அது வெடிப்பதற்க்கு காரணம்.( தீபாவளி பட்டாசும் வெடிக்க கந்தகம் தான் காரணம். )
கந்தம் மனித உடலுக்கு மிகச்சிறிய அளவுதான் தேவைப்படுவதால் இயற்க்கையும் அதனை கடுகுக்குள் வைத்து இருக்கிறது.
இனி கட்டாயம் கடுகு பார்க்கும் போது இந்த பதிவு உங்களுக்கு நினைவில் வரும் என்று நம்புகிறோன்.
இயற்க்கையில் எத்தனையோ வரம் இருக்கிறது. அதற்க்கு இந்த கடுகும் ஒர் உதாரணம்.