நாடியட் என்னும் நகரத்துப் பள்ளியில் வல்லபாய் பட்டேல் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் புத்தகம், நோட்டு, பென்சில் ஆகியவற்றை விற்று வந்தார்.அப்போது ஒரு நாள பட்டேல கடையில் ஒரு நோட்டு வாங்கி வந்தார்.
அதைக் கண்ட அவ்வாசிரியர், நீ ஏன் கடையில் நோட்டு வாங்கினாய்?என்னிடமல்லவா வாங்கவேண்டும்! எனக் கோபம் கொண்டு கேட்டார். அதற்குப்பட்டேல் பள்ளியின் சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றா சார்? எனத் திருப்பிக் கேட்டார்.அதைக் கேட்ட அவ்வாசிரியர் நான் உன் ஆசிரியர். நீ என் சொல்லுக்குக் கீழ்படிதல் வேண்டும். எதிர்த்துப் பேசாதே! என மேலும் கோபித்தார்.
பட்டேல் உடனே, நீங்கள் என் ஆசியர்தான். நாங்கள் உங்களிடம் பாடம் படிக்கத்தான் வருகின்றோம். உங்களிடம் வியாபாரம் செய்வதற்காக நாங்கள் வரவில்லை என்று தைரியமாகக் கூறினார். அதைக் கேட்டதும் ஆசிரியருக்குக் கடுங்கோபம் வந்தது;பட்டேலைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற முயன்றார். ஆனால் அதற்கு முன்பட்டேல் பள்ளியை விட்டு வெளியே சென்றுவிட்டர்.
மறுநாளும் பட்டேல் பள்ளிக்கு வரவில்லை. அவர் மட்டுமல்ல. அந்த வகுப்புமாணவர்கள் அனைவரும், பட்டேல் செய்தது சரி என்றும், அதுவே நியாயம் என்றும்அவர் பக்கம் சேர்ந்தனர். கடைசியில் அந்த நகரத்துப்பெரியவர் ஒருவரின் முயற்சியால் அவ்வாசிரியரும் மாணவர்களும் சமாதானமாயினர்.
அவ்விளைஞராகிய வல்லபாய்பட்டேல் தான் பிற்காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காகப் போரடினார்; இந்திய நாட்டின் சிற்றரசர்களின் நாடுகளையெல்லாம் ஏக இந்தியாவுக்காக அவ்வரசர்களோடு போராடி வெற்றி கண்டார்; இரும்புமனிதர் என்னும் பட்டத்தைப் பெற்றார்.
இளமையிலிருந்தே வரும் ஆக்கப்பூர்வமான வீர உணர்வு தரும் பரிசு வெற்றி,பெருமை!