Home » உடல் நலக் குறிப்புகள் » பாட்டி வைத்தியம்-2
பாட்டி வைத்தியம்-2

பாட்டி வைத்தியம்-2

* உடம்பு குளிர்ச்சியாக:ரோஜா இலைகளை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குளிர்ச்சி தரும்.

* வாய்ப்புண் குணமாக:

தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.

* தொண்டைப்புண் குணமாக:

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

காய்ச்சல் குணமாக:

அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.

தேமல், தோல் கரும்புள்ளிகள்:

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இழை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல் கரும்புள்ளி தீரும்.

கழுத்து வலி குணமாக:

அமுக்கிராஸ் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்று போட குணமாகும்.

பல்வலி குணமாக:

மகிழம்மரத்தின் பட்டையை பொடியாக்கி பல்துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் பறந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top